Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக், நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த மூவ்கள்தான். 'பிஜேபியின் பி-டீம்' என்கிற விமர்சனம் அவர் கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் டெல்லி தரப்பில் இருந்து விஜய்க்கு சென்ற அழுத்தமான தூது மற்றும் அதற்கு விஜய் கொடுத்த 'கவுண்டர்' பதில்கள் என கோட்டை வட்டாரம் தகதகக்கிறது.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்றத் துடிக்கும் பாஜக, 'ஆடு நனைகிறதே' என்று ஓநாய் அழுத கதையாய் விஜய்யிடம் தூது விட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக நடந்த 'வாட்ஸ் ஆப் மீட்டிங்'கில் தான் இந்த விவகாரம் சூடுபிடித்ததாகத் தகவல். "மத்தியில் நாங்க, மாநிலத்தில் நீங்க... ஆனால் இப்போதைக்கு 'டெப்யூட்டி சிஎம்' போஸ்ட் ஓகே-வா?" என்பதுதான் பாஜகவின் கேள்வி. ஆனால் இதை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.. மாறாக அவர் வேறு சில முக்கியமான கோரிக்கைகளை வைத்து இருக்கிறாராம்.

TVK Vijay

பாஜக மேலிடப் புள்ளிகளுடன் நடந்த ரகசிய ஆலோசனையில் விஜய் தரப்பு மிகத் தெளிவாகச் சில பாயிண்டுகளை முன்வைத்ததாகச் சொல்லப்படுகிறது.

"பி-டீம் முத்திரையை உறுதிப்படுத்த விரும்பவில்லை!"

தன்னைச் சுற்றிப் பின்னப்படும் விமர்சனங்களை விஜய் நன்கு உணர்ந்தே வைத்திருக்கிறார். "இப்போதே நான் பிஜேபியின் பி-டீம் என்று விமர்சிக்கப்படுகிறேன். இந்தச் சூழலில் இப்போது கூட்டணி வைப்பது அந்த விமர்சனத்தை நானே உறுதிப்படுத்துவது போலாகிவிடும். அது கட்சியின் வளர்ச்சிக்குத் தடையாக அமையும்.. அதோடு எனக்கு சிறுபான்மையினர்.. முக்கியமாக கிறிஸ்துவர்கள் ஆதரவு இருக்கிறது.. அதை நான் இழக்க விரும்பவில்லை.. அதுதான் எனக்கு அடிமட்ட வாக்குகள்.. அதை வாங்க வேண்டும் என்றால் நான் பாஜகவுடன் இருக்க கூடாது.. " என கறாராகச் சொன்னாராம் விஜய்.

மேலும், தமிழகம் முழுவதும் தங்களுக்குப் பலமான ஆதரவு இருப்பதாகவும், தனித்துப் போட்டியிட்டு வெல்லும் அளவுக்குத் தங்கள் கட்டமைப்பு வலுவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். "கூட்டணி பற்றித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.. இப்போ நான் ஆதரவு தரவில்லை.. தொங்கு சட்டசபை வந்தால் தேர்தலுக்கு பின் என்டிஏ ஆட்சி அமைக்க ஆதரவு தருகிறேன்" என்பதே அவரது தற்போதைய நிலைப்பாடாக இருந்திருக்கிறது.

முதல்வர் வேட்பாளர் கார்டு!

ஒருவேளை பாஜக கூட்டணி என்பதில் பிடிவாதமாக இருந்தால், அதற்கு விஜய் ஒரு அதிரடி நிபந்தனையை முன்வைத்ததாகத் தெரிகிறது. "என்னை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதலமைச்சர் வேட்பாளராக இப்போதே அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள். அப்படிச் செய்தால், அது விமர்சனங்களைத் தாண்டி தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த எழுச்சியை வாக்குகளாக மாற்றுவது எங்களுக்கு எளிது" என்று ஒரு செக் வைத்துள்ளார் 'விஜய்'.

அதானி கொடுத்த சிக்னல்!

இந்த ஆலோசனையில் பல்வேறு சாதக பாதகங்கள் அலசப்பட்டன. இறுதியில், "எனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகே இறுதி முடிவை அறிவிப்பேன்" எனக் கூறி கூட்டத்தை முடித்திருக்கிறார் விஜய்.

ஆனால், இந்த டீலிங்கிற்குத் தூதுவராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படும் தொழிலதிபர் அதானி, டெல்லி தலைமைக்கு ஒரு பாசிட்டிவ் சிக்னலை பாஸ் செய்திருக்கிறாராம். "விஜய்யின் பேச்சில் சில நிபந்தனைகள் இருந்தாலும், அவர் பாஜகவுடன் கைகோர்க்கும் மனநிலையில்தான் இருக்கிறார்" என்பதே அந்தத் தகவல்.

விஜய்யின் இந்த 'வெயிட் அண்ட் வாட்ச்' அரசியல் தமிழகத் தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+