தவெக தனித்தே போட்டி.. பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், புஸ்சி ஆனந்த் போட்டியிடும் தொகுதிகள் எது?
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ள நிலையில், யார் யார் எந்த தொகுதிகளில் களம் இறங்குகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இதில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. தி நகரில் புஸ்சி ஆனந்தும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும் போட்டியிடப்போகிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் என்றும், மே 4 ஆம் தேதி ரிசல்ட் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.

234 தொகுதியிலும் தவெக தனித்து போட்டி
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. திமுக, அதிமுக பாஜக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தீவிரம் காட்டியுள்ளன. விஜய்யை என்.டி.ஏ கூட்டணியில் இணைக்க பல்வேறு முயற்சிகள் நடந்த நிலையில் அவர் அதிக தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனால் விஜய் அதிமுக பாஜக கூட்டணியில் இணையவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலான்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கூறியுள்ளார். எனவே தமிழகத்தில் இந்த முறை 4 முனை போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
50 வேட்பாளர்களை உறுதி செய்த விஜய்?
ஏற்கனவே தவெக வேட்பாளர் நேர்காணலையும் சென்னை பனையூரில் விஜய் தொடங்கி இருந்தார். இதில் முதல் கட்டமாக 50 வேட்பாளர்களை விஜய் உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் தவெக முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் வெளியாகி இருக்கிறது. தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இது கிட்டத்தட்ட உறுதியானதாக பார்க்கப்படுகிறது.
விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்குமா என்பதற்காக வீடு வீடாக கருத்துக்கணிப்பும் கேட்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி விஜய்க்கு இங்கு அதிக ஓட்டுக்கள் இருப்பதாகவும் அவர்கள் கணித்துள்ளன. இதையடுத்து தான் அவர் அந்த தொகுதியை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஏசி அலுவலகம் பெரம்பூர் தொகுதியில் அமைக்கப்பட்டு வருகிறதாம்.
யார் யார் எந்த தொகுதியில் போட்டி?
இதேபோன்று தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தி நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்குவார் என்றும் சொல்லப்படுகிறது. மயிலாப்பூர் தொகுதியில் வெங்கட்ராமனும், எழும்பூரில் ராஜ்மோகனும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மரியவில்சன் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அம்பத்தூர் தொகுதியில் ஜி. பாலமுருகன் , ஆலந்தூரில் இ.சி.ஆர். சரவணன், கொளத்தூர் - பாலாஜி, துறைமுகம் - அசோக் (அ) விஜயகுமார், மதுரவாயல் - தினகரன், வேளச்சேரி - விஷ்ணு (அ) கேத்ரீன் எழில்மலை, திரு.வி.க. நகர் - பல்லவி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
-
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்!












Click it and Unblock the Notifications