வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் விஷயத்தில், மற்ற நாடுகளையும் உள்ளே இழுக்க டிரம்ப் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் அழைப்பையும் விடுத்தார். ஆனால், இந்த அழைப்பை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்று சொல்லப்படும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் முற்றிலும் நிராகரித்திருக்கின்றன. இதனால் டிரம்ப் மொக்கை வாங்கியிருக்கிறார்.

Trump

டிரம்பின் கெஞ்சல்

ஈரான் விஷயத்தில், தனக்கு உதவ முன்வர வேண்டும் என்று சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகளிடம் டிரம்ப் கேட்டிருந்தார். குறிப்பாக, இந்த நாடுகள் தங்கள் போர் கப்பல்களை ஹர்முஸ் நீரிணைக்கு அனுப்பி, ஈரானின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். டிரம்பின் கோரிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அவர் கேட்டதை போல மற்ற நாடுகள் உள்ளே வந்தால், நிச்சயம் 3ம் உலகப்போர் வெடிக்கும்.

மற்ற நாடுகளின் பதில்

ஆனால், அப்படி நடக்கவில்லை. டிரம்பின் கோரிக்கையை அதன் நட்பு நாடுகள் ஏற்கவில்லை. அப்படியெல்லாம் எங்க நாட்டு கப்பலை அனுப்ப முடியாது என்று முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிட்டன.

இங்கிலாந்து: தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளது.

பிரான்ஸ்: தனது நிலைப்பாடு தற்காப்பு மட்டுமே என்றும், போரில் ஈடுபடப் போவதில்லை என்றும் உறுதியாகக் கூறிவிட்டது.

ஜப்பான்: கப்பல்களை அனுப்புவதற்கான சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் தற்போதைய போர் சூழலைக் கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

சீனா: போரை நிறுத்துமாறு வலியுறுத்துவதோடு, எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வது அனைவரின் கடமை என்று பொதுப்படையாகக் கூறியுள்ளது.

ஆஸ்திரேலியா: கப்பல்களை அனுப்பப் போவதில்லை என்று நிராகரித்துள்ளது. தங்களிடம் போதுமான கடற்படை பலம் இல்லை என்று அறிவித்திருக்கிறது.

இப்படி தொடர்ந்து நட்பு நாடுகள் கைவிட்டதால், புலி வாலை பிடித்த கதையாக டிரம்ப் முழித்திருக்கிறார். போரில் பல அமெரிக்கா நிறைய செலவு செய்துவிட்டது.

பிரமாண்டமான செலவு

கடந்த 2 வாரங்களில் மட்டும் அமெரிக்கா ரூ.1.52 லட்சம் கோடியை செலவழித்திருக்கிறது. முதல் 2 நாட்களில் மட்டும் ரூ.18,000 கோடியை செலவழித்திருக்கிறது. இந்த தொகை ஓராண்டுக்கு இஸ்ரோவுக்கு மத்திய அரசு ஒதுக்கும் பட்ஜெட்டை விட அதிகமாகும். இந்த 12 நாட்களில் அமெரிக்கா செய்த செலவு பிரமாண்டமானது. அந்த அளவுக்கு பணம் நம்மிடம் இருந்தால், சந்திரயான் திட்டத்தை போல, 250 சந்திரயான் திட்டங்களை நம்மால் செயல்படுத்தியிருக்க முடியும்.

போரை முடிக்க வேண்டிய கட்டாயம்

மறுபுறம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் கடல் பாதையில், 20% வர்த்தகம் ஹர்முஸ் நீரிணையில்தான் நடக்கிறது. எனவே, இந்த பாதையை ஈரான் முடக்கியிருப்பதால் எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் அமெரிக்காதான் என்று மற்ற நாடுகள் பேச தொடங்கியிருக்கின்றன. எனவே போரை சீக்கிரம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் இருக்கிறார்.

தேவையில்லாத ஆணி

இந்த இரண்டு நெருக்கடிகளும், அமெரிக்காவை சீக்கிரமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று உந்தி தள்ளியிருக்கிறது. இதனால் டிரம்ப் கடும் அப்செட்டில் இருக்கிறார். நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும் விதமாக, அமெரிக்க ஊடகங்களே டிரம்புக்கு எதிராக பேச தொடங்கியிருக்கின்றன. இந்த போர் தேவையில்லாத ஆணி என்கிற அளவுக்கு டிரம்ப்பை விமர்சித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+