வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்
சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி என்றாலே பலருக்கும் முதலில் நினைவிற்கு வரக்கூடியவர்களில் வடிவேலுவும் ஒருவர். கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் திரைப்படங்களில் தனித்துவமான காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இன்று வரை அவரது வசனங்களும் முகபாவனைகளும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக பரவி வருவது, அவர் காமெடி எவ்வளவு காலத்தையும் தாண்டி ரசிகர்களிடம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
ஆனால் மறுபுறம், திரையுலகில் வடிவேலுவை பற்றிய கருத்துகள் எல்லாம் ஒரே மாதிரி இல்லை என்பதும் உண்மை. சிலர் அவரை சிறந்த கலைஞர் என்று பாராட்டினாலும், சிலர் அவரைப் பற்றி விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். குறிப்பாக தன்னை வளர்த்தவர்களை மறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பலமுறை எழுந்திருக்கிறது.

வடிவேலுவின் ஆரம்ப காலம்
மதுரையைச் சேர்ந்த வடிவேலு, மிக சாதாரண பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் பின்னர் தனது தனித்துவமான காமெடி ஸ்டைல் மூலம் ரசிகர்களிடம் இடம் பிடித்தார்.
நடிகர் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் வடிவேலுவின் ஆரம்ப காலத்தில் முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த அவர், விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.
வடிவேலுவின் காமெடி வசனங்கள் பல இன்று வரை ரசிகர்கள் பயன்படுத்தும் பிரபலமான மீம்ஸ் டயலாக்களாக மாறியிருக்கிறது.
விஜயகாந்த் விவகாரம்
வடிவேலுவின் வாழ்க்கையில் அதிகமாக பேசப்பட்ட சர்ச்சைகளில் ஒன்று விஜயகாந்த் தொடர்பானது. வடிவேலுவுக்கு ஆரம்ப காலங்களில் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க உதவியவர்களில் விஜயகாந்த் முக்கியமானவர். ஆனால் பின்னாளில் அரசியல் சூழலில் வடிவேலு விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தது பெரிய சர்ச்சையாக மாறியது.
அதன் பிறகு சில ஆண்டுகள் வடிவேலுவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததாகவும், அவர் ஒரு காலத்திற்கு திரையுலகில் இருந்து விலகி இருந்ததாகவும் பேசப்பட்டது.
கொட்டாச்சி பகிர்ந்த சம்பவம்
இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் கொட்டாங்குச்சி கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. பெண்ணின் மனதை தொட்டு திரைப்படத்தில் விவேக் உடன் இணைந்து நடித்த அனுபவத்தை பற்றி அவர் பகிர்ந்து இருக்கிறார். அதில், ஒருநாள் வடிவேலு நடிகர் விவேக்கிற்கு போன் செய்து "என்ன விவேக், என்ன வருபவனை எல்லாம் வளர்த்துவிட்டு இருக்கீங்க?" என்று கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு விவேக் மிகவும் அமைதியாக, "அவர்களை யாரும் வளர்த்துவிடவில்லை. அவர்களுக்கு திறமை இருந்தால் சினிமாவில் வேலை கிடைக்கும். யாராவது எழுதியிருப்பதுபோல அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நீயோ நானோ தடுக்க நினைத்தாலும் தடுக்க முடியாது. எல்லோரும் குடும்பத்தை விட்டுவிட்டு பசி பட்டினியோடு சினிமாவுக்கு வருகிறார்கள்" என்று விவேக் சொன்னதாக இந்த சம்பவத்தை கொட்டாச்சி கூறியிருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் கருத்து
இந்த தகவல் வைரலான நிலையில், திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் அவர்,டி.ராஜேந்தர், ராஜ்கிரண், விஜயகாந்த், கமலஹாசன், இயக்குனர் வி.சேகர் போன்றவர்கள் வடிவேலுவை சினிமாவில் நுழைய வைத்ததும், வளர்த்துவிட்டதும் தவறு. விவேக் ஒரு சிறந்த மனிதர். என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் விவாதம்
இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளன. சிலர் வடிவேலு ஒரு சிறந்த கலைஞர் என்று கூறி அவரை ஆதரிக்க, மற்றவர்கள் கடந்த கால சர்ச்சைகளை நினைவூட்டி விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
மறுக்க முடியாத கலைஞர்
எப்படிப் பார்த்தாலும் வடிவேலு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. பல தலைமுறைகளும் ரசிக்கும் வகையில் அவரது காமெடி இன்னும் சமூக வலைதளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும் கருத்து வேறுபாடுகளும் அவ்வப்போது மீண்டும் பேசுபொருளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications