For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகை லதாவை விட தமிழிசையின் நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சே!

ஆர்கே நகரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டால் படுதோல்வியைத் தான் தழுவ நேரிடும் என்கிறது ஒன் இந்தியா தமிழ் கருத்து கணிப்பு.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டால் கடைசி 2 இடங்கள் யாருக்கு என்ற போட்டியில் சசிகலா அதிமுகவுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என்கின்றனர் ஒன் இந்தியா கருத்து கணிப்பில் பங்கேற்ற வாசகர்கள்..

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக 3 அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதனால் வெற்றியை பெறுவதில் திமுக முனைப்புடன் உள்ளது.

கனவில் மிதக்கும் பாஜக

கனவில் மிதக்கும் பாஜக

உத்தரப்பிரதேச வெற்றி மமதையில் ஆர்.கே.நகரிலும் வெல்வோம் என கனவில் மிதக்கிறது தமிழக பாஜக. இதனால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனையே இத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தமிழிசை போட்டி

தமிழிசை போட்டி

தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரிஅனந்தன், திருவொற்றியூர் தொகுதியில்தான் எம்.எல்.ஏ.வானார். தமிழிசை படித்ததும் ராயபுரம் பள்ளியில்தான்... அவரது குடும்பத்தினரும் இப்பகுதியில்தான் வசித்து வருகின்றனர். இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழிசை போட்டியிடவே வாய்ப்பு அதிகம் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

ஒன் இந்தியா சர்வே

ஒன் இந்தியா சர்வே

இந்த நிலையில் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் கருத்து கணிப்பை நடத்தியது. இக்கருத்து கணிப்பில் கடைசியில் இருந்து 3-வது இடம்தான் தமிழிசை சவுந்தராஜனுக்கு கிடைத்துள்ளது. மொத்தம் 10,052 பேர் பங்கேற்ற இக்கருத்து கணிப்பில் தமிழிசைக்கு ஆதரவு என தெரிவித்தவர்கள் 577 பேர் மட்டுமே (5.74%).

நடிகை லதாவை விட ...

நடிகை லதாவை விட ...

தமிழிசைக்கு அடுத்து சசிகலா அணியின் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் கடைசி 2 இடங்களைப் பிடித்துள்ளனர். இதில் சுவராசியம் என்னவெனில் ஓபிஎஸ் அணியில் இணைந்த நடிகை லதாவுக்கு 679 பேர் (6.75%) ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதாவது நடிகை லதாவுக்கு கிடைத்த ஆதரவு கூட நாள்தோறும் மைக் பிடித்து டிவியில் வந்து போகும் தமிழிசை சவுந்தராஜனுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தோ பரிதாபம்!

English summary
According to Oneindia Tamil Survey, TamilNadu BJP Leader Tamilisai Soundrarajan will get fifth place only in RK Nagar Byelection,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X