பெருகிவரும் ஆன்லைன் மோசடி - நாய் வாங்க ஆசைப்பட்டு ரூ.1.5 லட்சத்தை இழந்த இளம்பெண்
ஆன்லைனில் நாய் வாங்க முயற்சித்த இளம் பெண் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
புதுச்சேரி: தனியார் மருத்துவமனை நர்ஸ் ஒருவர் ஆன்லைனில் நாய் வாங்க முயற்சித்து, ஒன்றரை லட்சத்தை இழந்தது தொடர்பாக புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்தியால் பேட்டை சாலை வீதியை சேர்ந்தவர் திவ்ய பிரியா, 25, இவர் தனியர் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். வருகிறார். இவர் அடிக்கடி ஆன்- லைனில் பொருட்கள் வாங்குவது வழக்கம்.

அதன்படி, ஒரு நிறுவனம் ஓடோ போன் விளம்பரத்தில் வரும் 'பக் பப்பி' நாயை போன்ற தோற்றம் உடைய அழகான நாயை விற்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அந்த நாயை வாங்க ஆசைப்பட்ட திவ்யபிரியா இணைய தளம் மூலம் விலை பேசினார். அதில், ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் தரவேண்டும் எனவும், குறிப்பிட்ட நாளில் நீங்கள் விரும்பிய நாய் பாதுகாப்பான முறையில் முகவரிக்கு அனுப்பபடும் எனவும் தெரிவித்தனர்.
ஆனால், அந்நாளில் நாய் வந்து சேரவில்லை. மறுபடியும் அந்நிறுவனத்தை தொடர்பு கொள்ள முயன்றபோதும் முடியவில்லை. இதுகுறித்து திவ்யபிரியா, பெரியகடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களே... ஷாப்பிங், கூட்ட நெரிசல், பேரம் பேசுதல் போன்ற எதைப்பற்றியுமே கவலைப்படாமல், வீட்டிலிருந்தபடியே சோப்பு முதல் வீடு வரையிலும் ஆர்டர் செய்து வாங்கி விடுகிறோம்.
எவ்வளவுக்கு எவ்வளவு வசதியும் நன்மைகளும் ஆன்லைன் ஷாப்பிங்கில் இருக்கிறதோ அதே அளவு தீமையும் இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர்கள் மட்டுமல்ல.. சில மோசடிகளும் இலவச இணைப்பாகவே தரப்படுகிறது. அதனால், ஆன்லைன் வாடிக்கையாளர்களே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது கொஞ்சம் உஷாராக வாங்குங்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications