சேலத்தில் 3 பேருக்குதான் டெங்கு பாதிப்பு.. தூத்துக்குடியில்தான் அதிகம்: தமிழக அரசு அறிக்கை
சென்னை: டெங்கு காய்ச்சல் குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள அறிக்கையில், எந்தெந்த பகுதிகளில் அதிக பாதிப்பு உள்ளது என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்குவுக்கு இதுவரை 18 பேர் உயிரிழப்பு என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 12,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அதிகபட்சமாக 1178 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் சென்னையில் 1,138 பேரும், சங்கரன்கோவிலில் 1,072 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் கோவை-942 பேர், திருப்பூர்-782 பேர், கன்னியாகுமரி-777 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சேலம், ஈரோடு மாவட்டங்களில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற ஒரு இளைஞர், கூறுகையில், "நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் என்னோடு சேர்த்து 10 பேர் டெங்குவிற்கு சிகிச்சை பெற்றதை நானே பார்த்தேன். ஆனால் இதுவரை வெறும் 3 பேர்தான் சேலத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல உள்ளது" என்றார்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் டெங்கு பாதிப்பு மிக, மிக அதிகமாக உள்ள நிலையிலும், அரசு ஏன் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications