கொசுவை கடவுள் மட்டுமே ஒழிக்க முடியும் - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்
கொசுவை எங்களால் ஒழிக்க முடியாது அது கடவுளால் மட்டுமே முடியும். நாங்கள் கடவுள் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சென்னை: கொசுவை ஒழிக்க கடவுளால் மட்டும்தான் முடியும், கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக்கொண்டு, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி உலகக் கொசுக்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

7,25,000 பேர் மரணம்
கொசுக்களால் ஏற்படும் நோய்களால் உலகம் முழுவதும் 7,25,000 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது. என்ன செய்தாலும் கொசுவை ஒழிக்க முடியவில்லை.

கொசுவினால் பரவும் நோய்கள்
டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா முதலான மோசமான வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நாடு முழுதும் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு தானேஷ் லஷ்தன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனு தள்ளுபடி
இந்த வினோத வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் நாடு முழுதும் கொசுவை அகற்ற வேண்டும் என எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கும் என நாங்கள் கருதவில்லை என்றனர்.

நாங்கள் கடவுள் அல்ல
நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வீட்டில் கொசு, ஈ உள்ளது. அதனை விரட்டுங்கள் எனக்கூற முடியாது. நீங்கள் கேட்பதை கடவுள் தான் செய்ய முடியும் என்றனர். மேலும் கடவுள் மட்டும் செய்ய முடிந்ததை நாங்கள் செய்ய வேண்டும் என கேட்காதீர்கள். நாங்கள் கடவுள் அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
நாராயணா இந்த கொசுத்தொல்லை உச்சநீதிமன்றம் வரைக்கு போயிருச்சேப்பா!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications