ஷீரடி டூர், அபிஷேக் பச்சன் சந்திப்பு, புதுப்பட ஷூட்டிங்- எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ரொம்ப பிசி
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.. ஆளும் அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன.. ஆனால் இந்த மாநில சட்டசபையின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தோ ஷீரடி சாய்பாபா கோவில் டூர், புதுப்பட சூட்டிங், அபிஷேக் பச்சான் சந்திப்பு என கடந்த ஒரு வாரமாக ரொம்பவே "பிஸியாக" மக்கள் கடமையாற்றுகிறாராம்.. இதைத்தான் சொல்கிறது அவரது ஃபேஸ்புக் பதிவுகள்.
வட தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கியது.. இதனால் வெள்ளக் காடாகிக் கிடக்கிறது பல மாவட்டங்கள்..
கடலூர், திருவள்ளூர் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட்டார் விஜயகாந்த். அப்போதுதான் பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவுக்கு தர்ம அடி கொடுத்தார். பின்னர் திருவள்ளூரில் பொதுமக்களை அடிக்க பாய்ந்தார்... இந்த களேபரங்களோடு கேப்டனின் 'மழை வெள்ள மீட்பு' நிவாரண நடவடிக்கைகள் முடிந்துவிட்டது போல..

புது படத்தில் பிஸியோ பிஸி
கடந்த நவம்பர் 19-ந் தேதியன்று திருவள்ளூர் வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட்ட விஜயகாந்த் கடந்த ஒரு வாரமாக செம பிஸியாகிவிட்டார். அப்படி என்ன பிஸி என கேட்கிறீர்களா....
20,21-ந் தேதிகளில் "எதிர்க்கட்சித்" தலைவர் விஜயகாந்த் புது பட வேலைகளில் பிசியோ பிசி.. 22-ந் தேதி ஞாயிறன்று நடைபெற்ற விழாவுக்கு எல்லோரும் வாங்க..வாங்கன்னு ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார் 'எதிர்க்கட்சித்'தலைவர் விஜயகாந்த்... அப்புறமாக புது நடிகர் சங்க நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பு... (மழைவெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தியிருப்பாங்களோ) 22-ந் தேதி முழுவதும் புதுபடமான 'தமிழன் என்று சொல்" படத்தின் தொடக்க விழா பரபரப்பு....

அபிசேக் பச்சானுடன் சந்திப்பு
அன்று சென்னை விமான நிலையத்தில் ஐஸ்வர்யா வீட்டுக்காரர் அபிசேக் பச்சானுடன் 'உற்சாக' சந்திப்பு.. இப்படி 'சினிமா'வில் பிஸியாகி விட்டார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயாகந்த்..

வீடியோ
திடீர்னு ஷீரடி சாய்பா கோவிலில் விஜயகாந்தும் தேமுதிக கட்சிநிர்வாகிகளும் வழிபாடு நடத்திய சிறப்பு புகைப்படங்கள்தான்...ஹோட்டல் சுவாமி மெட்ராஸ் உரிமையாளர் ஐயருடனான புகைப்படங்கள், ரோட்டர தபா சாப்பாடு என கன ஜோராக களைகட்டுகிறது கேப்டன் ஃபேஸ்புக் பக்கம்... இதுல ஷீரடி கோயிலில் எல்லோருக்கும் இருக்கிற குரூப் வீடியோ பதிவும் வேற...

பிரபாகரன் வாழ்த்திலும் விளம்பரம்
அப்புறமா திடீர்னு பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து... என்னய்யா எலி அம்மனமா ஓடுதுன்னு பார்த்தால் பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்திலும் புதுபடத்துக்கு விளம்பரம் தேடும் கேவலமான பஞ்சாயத்து..
ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து எங்களுக்கு பணியாற்றுங்கன்னு எதிர்க்கட்சித் தலைவராக்கினார்கள் மக்கள்... ஆம் மக்களுக்காக ரொம்ப பிஸிங்கோ நம்ம தலைவருங்க... என்கிற வகையில் செயல்பட்டு வருகிறார் விஜயகாந்த்

10 மார்க்தான்...
இப்படி நடந்துகிட்ட ஜூனியர் விகடன் சர்வேயில சொல்ற மாதிரி மக்கள் 10 மார்க் மட்டும்போட்டு பெயிலாக்காம வேற என்ன செய்வாங்க? நீங்களே... சொல்லுங்களே
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications