சட்டசபையில் புயலை கிளப்பிய உடன்குடி மின் திட்டம்.. சிபிஐ விசாரணை கோரிய ஸ்டாலின்
சென்னை: உடன்குடி மின் திட்டத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரம் சட்டசபையில் இன்று பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்கட்சிகள் டெண்டர் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் உடன்குடி மின் திட்டம் டெண்டர் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திராவிட முன்னேற்றக்கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன.

ஸ்டாலின் கேள்வி
இந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய திமுக சட்டமன்ற தலைவர் மு.க. ஸ்டாலின் டெண்டர் ரத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். திமுக ஆட்சிக்காலத்தில் உடன்குடி மின் திட்டத்திற்கு ரூ.32 கோடி ஒதுக்கப்பட்டது. இடமும் ஒதுக்கப்பட்டது.
திட்டம் ரத்து ஏன்?
பெல் நிறுவனம் உடன்குடி திட்டத்துக்கு நிதி ஒதுக்கியதாக தகவல் தெரிவித்த ஸ்டாலின், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். தற்போது திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இதுகுறித்து ஓய்வு பெய்ய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சி.பி.ஐ விசாரணை தேவை
இதனிடையே உடன்குடி மின் திட்டம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உடன்குடி திட்டம் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மார்சிஸ்ட் கட்சியினர் சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications