பாஜகவை விட்டுட்டு தேமுதிக, பாமக, மதிமுக, தமாகா சேர்ந்தால் நல்லது... இது தமிழருவி மணியன் தரும் ஐடியா!
சென்னை: வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக, தமாகா, மமக, இடதுசாரிகள் மற்றும் தலித் அமைப்புகள் இணைந்து வலிமையான கூட்டணி அமைத்தால், வாக்காளர்கள் தங்கள் பார்வையை நிச்சயம் திருப்புவார்கள் என காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
பாஜக தலைமையில் கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுகவை இணைத்தவர் தமிழருவி மணியன். இந்த முறை பாஜகவை விட்டு விட்டு மற்றவர்கள் இணைந்து புதுக் கூட்டணி அமைக்க ஐடியா கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வரும் நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை என்று புரிந்து விட்டது.
மக்கள் நலன் சார்ந்த சிந்தனைக்கும், நம் மாநில அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகி விட்டது. மக்களின் ஆர்ப்பாட்டங்களும், அழுகைக் குரல்களும், மதுவால் நிகழும் மரணங்களும் அ.தி.மு.க. அரசின் மனச்சான்றை தட்டி எழுப்ப முடியவில்லை.
மதுவைக் கொண்டு வந்தது தி.மு.க. மது வருவாயை பெரிதாக நம்பி அரசை நடத்துவது அ.தி.மு.க. இந்த இரு கட்சிகளையும் ஆட்சிப் பீடத்தில் இனி அமராமல் பார்த்துக் கொள்வதே மது விலக்கை நாடுபவர்களின் முதற்கடமையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சிகளும் வலிமையாகக் குரல் கொடுக்கின்றன.
மதுவால் தமிழகத்தைப் பாழ்படுத்திய இரு திராவிடக் கட்சிகளையும், தமிழினத்தை ஈழத்தில் அழிப்பதற்கு துணை நின்ற காங்கிரசையும், இந்துத்துவத்தை வெளிப்படையாக வேகப்படுத்தும் பா.ஜ.க.வையும் முற்றாக தவிர்த்து விட்டு தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா. ம.ம.க., இடதுசாரிகள், தலித் அமைப்புகள் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வலிமையான கூட்டணி அமைத்து களம் கண்டால், மக்கள் நலன் காக்க முனையும் இந்த கூட்டணியின் பக்கம் வாக்காளர்கள் தங்கள் பார்வையை நிச்சயம் திருப்புவார்கள்.
தேர்தல் முடிவு இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக அமையும். தமிழகத்தில் புதிதாய் ஒரு கூட்டணி ஆட்சி மலரும். இந்த சமூகக் கடமையைச் செய்வதற்கு இக்கட்சிகள் அனைத்தும் முடிவெடுத்தால் உண்மையான மதுவற்ற மாநிலத்தை உருவாக்க இவை பூரணமாக பாடுபடுவதாய் நம்பலாம். இவை அனைத்தும் ஓர் அணியில் ஒன்றுபட்டு களம் அமைக்க காந்திய மக்கள் இயக்கம் எல்லா வகையிலும் தன் பங்களிப்பை தரத் தயாராக இருக்கிறது.
இதை செய்வதற்கு தவறினால் மதுவிலக்குக்கு குரல் கொடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக நின்று அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து விடும்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications