ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணையை ஏற்க முடியாது.. சிபிஐ விசாரணைதான் வேண்டும்: கே.பி.முனுசாமி

ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை எல்லாம் சரியாக இருக்காது, சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று ஓபிஎஸ் அணியின் கே.பி முனுசாமி வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    K.P.Munusamy Asks Investigation For Jayalalithaa's Treatment

    சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மததை கண்டறிய வேண்டும் எனில் சிபிஐ விசாரணைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி. முனுசாமி கோரியுள்ளார்.

    OPS camp demand CBI probe into Jayalalithaa’s death

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

    ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது என்றார்.

    ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று கூறினார்.

    முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து கூறிய ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி முனுசாமி, நாங்கள் கேட்டது எல்லாம் சிபிஐ விசாரணைதான், ஓய்வு பெற்ற நீதி விசாரணை எல்லாம் நியாயமாக நடக்குமா என்பது சந்தேகமே என்றார்.

    தொடர்ந்து பேசிய கே.பி முனுசாமி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரினார்.

    வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக அறிவிப்போம் என்று கூறியதற்கு வரவேற்பு தெரிவித்த முனுசாமி,
    சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து முழுவதுமாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+