ஈபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையை ஏற்காத தொண்டர்கள்.. அதிமுக இனி என்ன ஆகும்?

ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையின் மூலம் அதிமுக கட்சி தொண்டர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையை ஏற்கவில்லை என்பது தெரியவந்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எம்ஜிஆர் நினைவு நாளில் அதிமுக படுதோல்வியா?- வீடியோ

    சென்னை: ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையின் மூலம் அதிமுக கட்சி தொண்டர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையை ஏற்கவில்லை என்பது தெரியவந்து இருக்கிறது.

    ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்து இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை வரை தினகரன் முன்னிலை வகிக்கிறார். ஆளும் கட்சியான அதிமுக இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது.

    OPS-EPS failed to gain the support of ADMK members

    இந்த பின்னடைவின் மூலம் அதிமுக தொண்டர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரியவந்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஆளும்கட்சியில் இருந்து வந்த பிரிவினையில் மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியவந்தது.

    கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை இழந்த தினகரனுக்கே ஆர்.கே நகர் மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தின் கோட்டையாக இருந்த ஆர்.கே நகரை கிட்டத்தட்ட தினகரன் தற்போது தனது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். இதன் காரணமாக தமிழக அரசியலில் பெரிய தாக்கம் ஏற்பட இருக்கிறது.

    அதுமட்டும் இல்லாமல் ஆளும் கட்சியான அதிமுகவிலும் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது. சரியான தலைமை இல்லாமல் அதிமுக கட்சி தவித்து வருவதாக மக்கள் கருதுவது இந்த முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

    இந்த வாக்கு எண்ணிக்கை இன்னொரு முக்கியமான விஷயத்தையும் வெளியே கொண்டு வந்து இருக்கிறது. சென்ற 2015 ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா 1,60,921 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அத்தனை அதிமுக வாக்காளர்களையும் தற்போது ஓபிஎஸ்- இபிஎஸ் கூட்டணி இழந்து இருக்கிறது.

    ஏற்கனவே அதிமுக கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ க்கள் தினகரன் பக்கம் உள்ளனர். அதேபோல் தினகரன் கூற்றுப்படி அதிமுக கட்சியில் அவரின் சிலீப்பர் செல்கள் சிலர் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த தேர்தல் காரணமாக அதிமுக கட்சி மேலும் பிளவு பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+