அதிமுக லெட்டர் பேர்டில் மோடிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் சசிகலா தரப்பு!
சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை ஒட்டி, பிரதமர் மோடிக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேர்டில் இருந்து மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது சசிகலா தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசம், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இதையடுத்து பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ''பாஜகவின் தற்போதைய வெற்றிக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலமாக, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது,'' என்று கூறியுள்ளார்.
இதுஒரு புறம் இருக்க, இந்த வாழ்த்துச் செய்தியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இருந்து அனுப்பியுள்ளார் ஓபிஎஸ். இது சசிகலா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுவிட்டதாக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்திருக்கிறார். ஆனால், சசிகலாவின் உத்தரவு செல்லாது என்று ஓபிஎஸ் அணியினர் கூறிவருகின்றனர். இந்தநிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேர்டில் வாழ்த்து தெரிவித்த விவகாரம் சசிகலா தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications