அழுத முகத்துடன் பதவியேற்று அபார மகிழ்ச்சியுடன் விலகிய ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: அதிமுகவினர் அத்தனை பேரும் ஓ.பன்னீர் செல்வத்தை மிகுந்த பொறாமையுடன் பார்க்கின்றனர். எப்படி ஓ.பன்னீர் செல்வத்தால் மட்டும் இப்படி விசுவாசத்துடன் இருக்க முடிகிறது என்பதுதான் அந்த ஆச்சரியம்.
2 முறை ஜெயலலிதாவின் இடத்தில் அவர் அமர வைக்கப்பட்டார். யாரிடம் கோபித்துக் கொண்டாலும், நம்பாவிட்டாலும், ஓ.பன்னீர் செல்வத்தை மட்டும் ஜெயலலிதா மிகவும் அதீதமாக நம்புகிறார். காரணம், ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவிடம் காட்டும் விசுவாசம்.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அதிமுகவில் இருந்து வரும் ஓ.பன்னீர் செல்வம், அரசியல்வாதிகளிடம் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் கண்ணியமானவர் என்று பெயர் பெற்றவர் ஆவார். இவரது துறை சார்ந்த அதிகாரிகளும், மிகவும் பணிவானவர், அதிர்ந்து பேசாதவர், கோபித்துக் கொள்ளாதவர், எதைச் சொன்னாலும் திருத்தமாக, மென்மையாக, நாகரீகமாக சொல்லக் கூடியவர் என்கிறார்கள்.
தனது துறை உயர் அதிகாரிகளிடமும், பிறரிடமும் கூட மிகவும் நாகரீகமாக பேசுவாராம் ஓ.பன்னீர் செல்வம். யாரையும் ஒருமையில் பேச மாட்டாராம். ஜெயலலிதா மீது இவர் கொண்டுள்ள விசுவாசத்திற்கு நிகராக அதிமுகவில் யாரும் கிடையாது என்பது கட்சிக்காரர்களே வாசிக்கும் பாராட்டாகும்.
தனது தலைவருக்காக 2வது முறையாக முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதுவும் பெருத்த சந்தோஷத்துடன்.
முன்பு, 2001 செப்டம்பரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா. இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் முதல் முறையாக முதல்வர் பொறுப்பில் அமர்ந்தார் ஓ.பன்னீர் செல்வம். அதன் பின்னர் 2002 மார்ச் மாதம் தனது முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம்.
அப்போதும் முதல்வரானபோது மிகுந்த சோகத்துடன் பதவியேற்றார். விலகியபோது மிகுந்த சந்தோஷத்துடன் விலகினார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி ஜெயலலிதாவின் பதவி பறிபோனபோது யார் யார் பெயரோ முதல்வர் பதவிக்கு அடிபட்டது. ஆனால் மீண்டும் ஓ.பன்னீர் செல்வமே முதல்வரானார். இந்த முறை முதல்வராக அவர் பதவியேற்றபோது கண்ணீர் விட்டபடி பதவியேற்றார். அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமைச்சர்களும் அழுது கதறியவாறுதான் பதவியேற்றனர்.
இன்று அத்தனை பேரும் மகா சந்தோஷமாக பதவியேற்றுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் முகத்தில் ஆனந்தக் கூத்தாட, முதல்வர் பதவியிலிருந்து நேற்று விலகினார். பெருத்த நிம்மதி, சந்தோஷம், பூரிப்புடன் பதவி விலகிய அவர் இன்று 12 அமைச்சர்களோடு ஒருவராக முதல் பேட்ச்சில் இடம் பெற்று ஒரு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
முதல் முறை முதல்வராக இருந்தபோது சட்டசபைக்கே போகவில்லை பன்னீர் செல்வம். 2வது முறை பதவியில் இருந்தபோதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அவர் அமரவில்லை. அதேபோல கோட்டையிலும் கூட அவர் ஜெயலலிதாவின் அறைப் பக்கம் எட்டிக் கூட பார்த்ததில்லை. மேலும் சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை.
யார் தன்னைப் பற்றி எவ்வளவு கேலி பேசினாலும், முகத்தில் மாறாத புன்னகையுடன் இந்த "கஷ்ட" காலத்தில் வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
மொத்தத்தில் ஜெயலலிதாவின் பூரண விசுவாசியாக மேலும் ஒரு முறை தன்னை நிரூபித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications