முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார்.. தினகரன் 'திடுக்'
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்ததாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிடிவி தினகரன் இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்தார்.

அழிக்க நினைக்கிறார்
அதாவது பாஜகவும் பிரதமர் மோடியும் தான் அதிமுக பிளவுக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி அதிமுகவை அழிக்க நினைப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

குருமூர்த்தி மூலம்..
சசிகலாவை முதல்வராக்க முன்மொழிந்தவர் இதே ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். குருமூர்த்தி மூலம் பன்னீர்செல்வத்தை சசிலாகவுக்கு எதிராக பா.ஜ.க.தான் தூண்டிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சின்னம் எப்படி கிடைத்தது?
ஓ.பன்னீர்செல்வத்தின் படிப்படியான உயர்வுக்கு சசிகலா தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு எப்படி கிடைத்தது என்று இப்போது புரிகிறதா? என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார்.

மோடி அதிமுக பொது செயலாளரா?
பா.ஜ.க.வின் முதல் ஏஜெண்ட் பன்னீர்செல்வம், இரண்டாவது ஏஜெண்ட் எடப்பாடி பழனிச்சாமி என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பிரதமர் மோடியா என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மயுத்தத்தை தூண்டியது பாஜக
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார். அமைச்சர்களை சேர்த்து கொண்டால் மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் பாஜகவின் தூண்டுதலால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

பதவி கிடைக்காத விரக்தியில்
மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கள் குடும்பத்தினர் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியின் காரணத்தால் தான் ஓ.பன்னீர்செல்வம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications