வர்தா பாதிப்பு: மோடியுடன் நாளை ஓபிஎஸ் சந்திப்பு- தலைமைச் செயலகத்தில் மும்முர ஆலோசனை!
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நாளை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வர்தா புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் என் கோரிக்கை வைக்க உள்ளார்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் இன்று முதல்வர் பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

வங்க கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12ம் தேதி சென்னையில் கரையைக் கடந்தது. இந்த புயல் சென்னையை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதத்தை உண்டாக்கியது. இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து தடைபட்டது. மின்சார இணைப்பும், தொலைதொடர்பும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்படாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தொழில் அமைப்புகள் கணித்தன.
இந்தநிலையில் தமிழகத்துக்கு நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு முதற்கட்டமாக அளிக்க வேண்டும் என்றும், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், முதற்கட்டமாக தமிழக அரசு சார்பில் ரூ.500 கோடியை புயல் நிவாரணத்துக்காக விடுவித்தும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள வர்தா புயல் சேதம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு தயாரித்து வருகிறது. இந்த அறிக்கையை டெல்லி சென்று பிரதமரிடம் கொடுப்பதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து உள்ளார்.
டெல்லி செல்ல உள்ளது தொடர்பாக ஞாயிறு கிழமையான இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பிரதமரிடம் அளிக்கப்பட உள்ள மனு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications