எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.. ஓபிஎஸ்
சென்னை: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா கூறியுள்ளார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
டெல்லி சென்றிருந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றிருந்தார். அவருடன் மைத்ரேயன், கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்றிருந்தனர்.

ஆனால் மைத்ரேயனை மட்டும் சந்தித்த நிர்மலா சீதாராமன், ஓ.பி.எஸ்ஸை சந்திக்க மறுத்து விட்டார். இதனால் பெரும் அதிர்ச்சி, ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பி வந்தார் ஓ.பி.எஸ்.
இன்று இரவு அவர் டெல்லியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து அவரது கருத்தை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களை ஏமாற்றி விட்டார் ஓ.பி.எஸ்.
நிர்மலா சீதாராமன் குறித்த செய்திக்கு அவர் பதிலளிக்கையில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார் என்று மட்டும் தெரிவித்தார். வேறு எந்த கருத்தையும் அவர் சொல்லவில்லை, பதிலளிக்கவும் இல்லை.
இருப்பினும் டெல்லியில் ஏதோ நடந்துள்ளது என்பதை தனது பதில் மூலம் சூசகமாக உணர்த்தி விட்டார் ஓ.பி.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications