Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தந்தைக்கும் தனையனுக்கும் இடையே சிண்டு முடிய வேண்டாம்: ஒபிஎஸ்க்கு ஸ்டாலின் குட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவிலும், குடும்பத்திலும் குழப்பம் இருப்பதாக அமைச்சர் பன்னீர் செல்வம் கற்பனை செய்துகொள்ள வேண்டாம் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் இருக்கை ஒதுக்கீடு குறித்து பன்னீர் செல்வத்தின் விளக்கத்துக்கு ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

சட்டசபை கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்ததும், பேரவைத் தலைவரைச் சந்தித்த தி.மு.க எம்.எல்.ஏக்கள், ' பேரவையில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை போதுமானதாக இல்லை. அவை நடவடிக்கையில் பங்கேற்கும் வகையில், கலைஞருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்' என வலியுறுத்தினர். இதுதொடர்பாக, அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க உறுப்பினர்களுக்கு எந்தெந்த இடங்களில் இருக்கை ஒதுக்க வேண்டுமென்று ஸ்டாலின் பட்டியல் அளித்திருந்தார்.

அதில், கருணாநிதியின் பெயர் இல்லவே இல்லை. சட்டசபைக்கு கருணாநிதி வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது. கருணாநிதி குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்னைகளை மறைப்பதற்காக, பேரவைத் தலைவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார் ஸ்டாலின் என ஒபிஎஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை திமுகவில் அதிர்வலைகளை உருவாக்க அதற்கு பதிலடி தரும் விதமாக திமுக பொருளாளரும், சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டசபையில் பேட்டி

சட்டசபையில் பேட்டி

17-6-2016 அன்று நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் - தலைவர் கலைஞர் அவர்களுக்கு அவையில் கோரிய இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.வுக்கு அவையில் ஆளுநர் உரை மீது பேச ஒவ்வொரு நாளும் மூன்று பேருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.

மரபு தொடரவேண்டும்

மரபு தொடரவேண்டும்

பேரவை வளாகத்தில் முறைப்படி எதிர்க் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய அறை 89 உறுப்பினர்கள் அமர்வதற்கு ஏற்ற இடமாக அளிக்க வேண்டுமென்றும், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கடைசி நாளன்று முதல்வர் பதிலுரை ஆற்றுவதற்கு முன்பு எதிர்க் கட்சித் தலைவர் பேசுகின்ற மரபு தொடரப்பட வேண்டுமென்றும் திமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒபிஎஸ் பதில்

ஒபிஎஸ் பதில்

திமுகவின் இந்தக் கோரிக்கைகளுக்கு பேரவைத் தலைவர் உரிய தீர்வு காணாவிட்டால், தலைவர் கலைஞர் அவர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கூறி, அனைத்து நாளேடுகளிலும் எனது பேட்டி வெளிவந்துள்ளது.

எனது கோரிக்கைகளுக்கு பேரவைத் தலைவர் உரிய பதில் அளிப்பதற்கு முன்பு, அவை முன்னவர், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவரின் அதிகாரத்தை தன் கையிலே எடுத்துக் கொண்டு, பதில் கொடுத்துள்ளார்.

சிண்டு முடிய வேண்டாம்

சிண்டு முடிய வேண்டாம்

நான் கொடுத்த பட்டியலில் என் தந்தையின் பெயர் இல்லை என்றும், தந்தைக்கும் தனயனுக்கும் உள்ள போட்டிதான் காரணம் என்றும் கழகத்திற்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையிலே சிண்டு முடியும் வேலையில் இறங்கியிருப்பது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதல்ல.

யார் எழுதி கொடுத்த அறிக்கை?

யார் எழுதி கொடுத்த அறிக்கை?

பொதுவாக அமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள் இப்படியெல்லாம் அறிக்கை விடக் கூடியவர் அல்ல. இருந்தாலும் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு கொடுத்திருப்பதைப் போலத் தான் தெரிகிறது.

தவறான செய்தி

தவறான செய்தி

தந்தைக்கும், தனயனுக்கும் இடையே போட்டி என்றெல்லாம் பன்னீர்செல்வம் அவர்களும், அவர்களை ஆதரிக்கும் ஒரு சில நாளேடுகளும் தொடர்ந்து சொல்லிவருவது முற்றிலும் தவறான செய்தியாகும். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் இவ்வாறு மேற்கொள்கின்ற முயற்சி வெற்றி பெறாது.

மூன்றாதர அரசியல்வாதி

மூன்றாதர அரசியல்வாதி

மூன்றாந்தர அரசியல்வாதியைப் போல பன்னீர்செல்வம் இப்படிப்பட்ட கற்பனைக் கதைகளைக் கூறுவதை விட்டு விட்டு, உண்மை நிலைக்கு வர வேண்டும். பேரவையில் திமுகவைச் சேர்ந்த எந்தெந்த உறுப்பினர்களுக்கு எங்கு இடம் ஒதுக்க வேண்டுமென்று நான் கொடுத்த பட்டியலில் தலைவர் கருணாநிதியின் பெயர் இடம் பெறவில்லையே ஏன் என்று கேட்டிருக்கிறார்.

கொறடா மூலம் தனி கடிதம்

கொறடா மூலம் தனி கடிதம்

தலைவர் கலைஞர் அவர்களுக்கு, அவரது உடல் நலத்திற்கு ஏற்ற இடம் ஒதுக்கப்பட வேண்டுமென்று பேரவைத் தலைவர் அவர்களுக்கு எங்கள் கட்சியின் "கொறடா" சக்கரபாணி அவர்கள் மூலமாக தனிக் கடிதம் ஒன்று பேரவைத் தலைவரிடம் தரப்பட்டுள்ளது.

தனி காரணம் இல்லை

தனி காரணம் இல்லை

தலைவர் கருணாநிதியின் இருக்கை பற்றி இவ்வாறு தனிக்கடிதம் கொடுப்பது என்ற எண்ணத்தில்தான், நான் முதலில் கொடுத்த பட்டியலில் தலைவர் அவர்களின் பெயர் இடம் பெறவில்லையே தவிர, பன்னீர்செல்வம் அறிக்கையிலே கூறியிருப்பது போல, அதற்கு எந்தவிதமான தனிக் காரணமும் கிடையாது.

தட்டி பறித்து விட்டேனா?

தட்டி பறித்து விட்டேனா?

பன்னீர்செல்வம் அவர்கள் தனது அறிக்கையில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை நான் தலைவர் அவர்களிடமிருந்து தட்டிப் பறித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதைவிட கேவலமான ஒரு குற்றச்சாட்டு இருக்க முடியாது. எதிர்க் கட்சித் தலைவர் பதவியை எனக்கு அளித்தவரே தலைவர் கருணாநிதிதான்.

கற்பனை வேண்டாம்

கற்பனை வேண்டாம்

பன்னீர்செல்வம், அவருடைய குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் உள்ள நெருக்கடியை மனதிலே கொண்டு, எங்கள் கழகத்திற்குள்ளேயும், குடும்பத்திற்குள்ளேயும் குழப்பம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். முதல்வர் டெல்லிக்குச் சென்ற நேரத்தில் கூட, முறைப்படி நிதித்துறை அமைச்சரை அழைத்துச் செல்லவில்லை.

பெருந்தன்மை வேண்டும்

பெருந்தன்மை வேண்டும்

பன்னீர்செல்வத்திற்கும் கரூர் அன்புநாதனுக்கும் நத்தம் விசுவநாதன் மூலமாக உள்ள உறவுகள் எல்லாம் எந்த நிலையிலே இருக்கின்றன என்பதையெல்லாம் மறைப்பதற்காக இப்படிப்பட்ட முயற்சியிலே அமைச்சர் பன்னீர்செல்வம் ஈடுபடுவதை விட்டு விட்டு, ஆட்சிப் பொறுப்பைத் தொடர்ந்து ஏற்றுள்ள அந்தப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது நல்லது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+