சூடுபிடிக்கும் ஆர்.கே. நகர் தேர்தல்.. மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் ஓ.பி.எஸ். பிரசாரம்
ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய உள்ளார்.
ஜெயலலிதா மறைந்தததையடுத்து சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் தினகனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. சசிகலா தரப்பு டிடிவி தினகரன் தொகுதியில் வீடு வீடாக சென்று தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்று ஆர்.கே.நகரிலே தங்கி பணியாற்றுவேன் என்றும் உறுதி அளித்து வருகிறார் தினகரன். ஓபிஎஸ் தரப்பு முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், அழகு தமிழ் செல்வி ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் ஆர்.கே.நகரில் பிரசாரத்தை தொடங்குகிறார். முதலில், ஆர்கே நகர் தொகுதிக்கு உள்பட்ட நாகூரான் தோட்டப்பகுதியில் இருந்து ஓபிஎஸ் பிரசாரத்தை தொடங்குகிறார். அப்போது அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியின் தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications