அதுதான் உங்கள் யூகம் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள்.. அதிமுக இணைப்பு குறித்து ஓபிஎஸ்
தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து மோடியிடம் விவரித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
டெல்லி: தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், தமிழக அரசியலில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக பிரதமர் மோடியிடம் விளக்கியதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்கு சென்ற அவர் அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு நேற்று டெல்லி திரும்பினார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பிற்கு பின்னர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பிரதமர் எங்களுக்கு சுதந்திர தின விழா வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
அதன்பின்னர் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும் தமிழக அரசியலில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக விளக்கினேன். விரைவில் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுப்போம் என்றார்.
தமிழக அரசியல் சூழல் என்றால் அதிமுக இணைப்பு குறித்தும் நீங்கள் பேசியதாக நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதுதான் உங்கள் யூகம் என்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மழுப்பலான பதிலையே தந்தார்.
அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி அணியினர் சாதகமாக பேசி வரும் நிலையில் மோடியிடம் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து பேசியதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
தப்பு செஞ்சா அடுத்த செகண்டே பதவி காலி.. பனையூர் தவெக ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் கொடுத்த அதிரடி ஷாக் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications