லட்சிய பாதையை விட்டு லட்சங்களை நோக்கி சென்றால் அரசியலில் அனாதைதான்... ஓபிஎஸ் எச்சரிக்கை
ஜெயலலிதா வழியில் லட்சிய பாதையில் செல்லும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று எடப்பாடி கோஷ்டிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம்: ஜெயலலிதா வழியில் லட்சிய பாதையில் செல்லாமல் போனால் மக்கள் உங்களை அரசியல் அனாதைகளாக்கிவிடுவார்கள் என்று எடப்பாடி கோஷ்டிக்கு ஓ.பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் எம்ஜிஆர் 100-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் அணியினர் நேற்று நிகழ்த்தினர். இதில் செம்மலை எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை கடந்த 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார். 17 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அந்த இயக்கத்தில் ஜெயலலிதாவின் அயராது உழைப்பினால் தற்போது ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.
ஆனால் அவர் மறைந்த பிறகு, அதிமுக ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது. அதை மீட்டெடுப்பதற்காக தர்ம யுத்தம் தொடங்கியுள்ளோம். இதில் விரைவில் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சட்டசபை தேர்தல் வரலாம். எடப்பாடி அணியினர் செல்வது சரியான பாதை அல்ல.
ஜெயலலிதாவின் லட்சிய பாதையில் செல்லும் எங்களுடன் இணைந்தால் மக்கள் உங்களை மதிப்பர். இல்லையெனில், அரசியலில் அனாதைகளாக்கப்படுவீர்கள் என்று தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications