"நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்".. சசிகலாவை செமையாக ஓட்டிய ஓ.பி.எஸ்.!
சசிகலா பேச்சைப் பார்த்தால் நானும் ரவுடிதான் காமெடிதான் நினைவுக்கு வருவதாக முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவை வடிவேலுவுடன் ஒப்பிட்டுப் பேசி அவரை காமெடி பீஸ் என்று மறைமுகாமாக கூறி விட்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
ஆஹா.. நம்ம ஓ.பி.எஸ்ஸா இது என்று அத்தனை பேரும் ஆச்சரியப்படும் அளவுக்கு அப்படி ஒரு பேச்சு பேசி வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இவருக்குள் இப்படியும் ஒரு மனிதர் இருந்தாரா இத்தனை நாட்கள் என்று பலரும் வியந்து போகும் அளவுக்கு இருக்கிறது முதல்வரின் பேச்சுக்கள்.

அழுத்தம் திருத்தமாக பேசுகிறார். இயல்பாகப் பேசுகிறார். எந்தக் கேள்வி கேட்டாலும் எதார்த்தமாக பதிலளிக்கிறார். சற்றும் தயக்கம் இல்லை, குழப்பம் இல்லை. தெளிவாக பேசுகிறார். அதை விட முக்கியமாக நள்ளிரவு நேரமாக இருந்தாலும் அந்த புன்னகை மட்டும் முகத்தை விட்டு அகலுவதே இல்லை.
ஜாலியாக இருக்கிறார் மனிதர். ஜாலியாக பேசுகிறார். சசிகலாவின் பேச்சை ஜாலியான முறையில் விமர்சிக்கிறார். மனதை சித்திரவதை செய்யாத அளவுக்கு நாசூக்காக, நாகரீகமாக விமர்சிக்கிறார். நேற்று கூட கூவத்தூரில் தன்னை சிங்கம் என்று கூறி சசிகலா பேசினார். இதை சமூக வலைதளங்களில் தாறுமாறாக விமர்சித்துக் கொண்டுள்ளனர். ஓ.பி.எஸ்ஸும் கூட இதுகுறித்துக் கருத்துக் கூறினார்.
அவர் கூறுகையில், யாராவது தன்னைத் தானே சிங்கம் என்று சொல்வார்களா, சொல்லுங்க. அவர் சிங்கம் வருது, சிங்கம் வருது என்கிறார். இதைப் பார்த்தால் எப்படி இருக்கு தெரியுமா.. வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே, போலீஸ் வேனில் ஏறப் போகும்போது போலீஸார் தடுப்பார்கள். அதற்கு வடிவேலு, நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று சொல்வாரே அது போல இருக்கு என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
அப்படிச் சொல்லும்போது பன்னீர் முகத்தைப் பார்க்க வேண்டுமே.. அப்படி ஒரு சிரிப்பு.!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications