ஓபிஎஸ் vs சசிகலா: முதல்வர் சீட் யாருக்கு .... பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்?
தமிழக அரசியல் களம் படுபரப்பாக உள்ளது. பெரும்பான்மையை நிரூபித்து யார் அரியணையில் அமரப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சசிகலா முதல்வராவா? அல்லது ஓ.பன்னீர் செல்வம் 4வது முறையாக முதல்வராவாரா? என்ற கே
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தியான புரட்சிக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன்
ஆட்சி அமைக்க முடியும். அந்த 117 எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. என்னதான் அதிமுக எம்எல்ஏக்களை பாதுகாப்பாக சிறை வைத்தாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று தில்லாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுகவிற்கு மொத்தம் 136 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் பேரவைத் தலைவரை கழித்து விட்டால் மொத்தம் 134 உறுப்பினர்கள்தான். திமுக 89, காங்கிரஸ் 8,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1,நியமன உறுப்பினர் 1,என சட்டசபையில் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வத்திற்கு இப்போது வரை 5 எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். 60 எம்எல்ஏக்கள் வரை ஓபிஎஸ் பக்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் தற்போது சசிகலா தங்களது கஸ்டடியில் 130 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளது. இவர்கள் அனைவருமே சசிகலாவை ஆதரிப்பார்களா? என்பது உறுதி இல்லை.

எத்தனை பேர் ஆதாரவு
சசிகலாவிற்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே முதல்வராக தொடருவேன் என்று கூறியுள்ளார். ஒருவேளை 20 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தால் கூட சசிகலாவிற்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114ஆக குறைந்து விடும். அதே நேரத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரின் ஆதரவு கடிதத்தையும் வாங்கி வைத்துள்ளாராம் சசிகலா.

ஓபிஎஸ்க்கு ஆதரவு
தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு படையெடுப்பதால் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதுவரை 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு எம்பியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். மேலும் பலர் அடுத்தடுத்த நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகசியமாக பலர் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

ஆளுநர் வருகை
இன்று தமிழகம் வரும் ஆளுநர் முன்பாக தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை நிறுத்தி ஆட்சியமைக்க உரிமை கோருவார் சசிகலா. எனவே அனைவரின் கண்களும் ராஜ்பவனை நோக்கியே உள்ளன. சசிகலா பெரும்பான்மையை நிருபிப்பாரா? அல்லது 1988ல் சட்டசபையில் நடந்தது போல அதிமுக வரலாறு மீண்டும் திரும்புமா? பார்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications