காணாம போய்ருவீங்க ஓ.பி.எஸ்.. நாஞ்சில் சம்பத் சாபம்!
எம்எல்ஏக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள பாதுகாப்பாக தங்கியுள்ளனர். கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர் செல்வம் அரசியலில் இருந்து காணாமல் போவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் அரசியல் இருந்து காணாமல் போவார் என்றும், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போவார்கள் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் திடீரென ஓபிஎஸ் ஆதரவு நிலையை எடுத்தார். இதனையடுத்து அவரை கட்சியின் அவைத்தலைவர், மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார் சசிகலா.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், மதுசூதனன் தனி ஆளாகத்தான் ஓ.பன்னீர் செல்வத்தின் பின்னால் சென்றுள்ளார். அவருடன் வேறு யாரும் செல்லவில்லை என்றார்.
தொடர்ந்து எம்எல்ஏக்கள் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், தமிழக அரசியலில் சில அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. எனவே எம்எல்ஏக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளவும், பாதுகாத்துக்கொள்ளவும் விடுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஒ.பன்னீர் செல்வம், கட்சிக்கு துரோகம் செய்து விட்டு சென்றுள்ளார். அவரை நம்பி போனவர்கள் காலாவதியானவர்கள். ஓ.பன்னீர் செல்வம் அரசியலில் இருந்தே காணாமல் போவார் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications