கணவரைப் பிரிந்து வாழ்ந்த மேடைப்பாடகி பலாத்காரம் செய்து கொலை – ஓசூரில்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கணவரை பிரிந்து வாழ்ந்த மேடைப் பாடகி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகராட்சிகு உட்பட்ட மூக்கண்டப்பள்ளி எம்.எம்.நகரைச் சேர்ந்தவர் "ஆர்கெஸ்ட்ரா" பாடகி ஜெயந்தி (எ) ஆஷா.
இவர் திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாவில் நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடியும், நடன நிகழ்ச்சியில் பங்கேற்றும் வந்தார்.
கணவருடன் கருத்து வேறுபாடு:
இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த தர்மா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷினி என்ற 10 வயது மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஆஷா ஓசூரில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
திறந்திருந்த கதவுகள்:
மகள் தர்ஷினி கிருஷ்ணகிரி அருகே உள்ள எலத்தகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் ஆஷா வீட்டின் கதவு ஞாயிற்றுக்கிழமை திறந்த நிலையில் இருந்தது.
கழுத்தறுக்கப்பட்டு படுகொலை:
இதை கண்டு சந்தேகம் கொண்ட பக்கத்து வீட்டினர் உள்ளே சென்று பார்த்தபோது ஆஷா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது உடலில் ஆடைகள் இன்றி இருந்துள்ளது.
காவல் நிலையத்தில் புகார்:
இதைகண்ட அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக "சிப்காட்" காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனை:
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஷாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அணைக்கப்பட்ட செல்போன்:
கொலை செய்யப்பட்ட ஆஷா இரண்டு "சிம்"கார்டுகளை கொண்ட செல்போனைப் பயன்படுத்தி வந்துள்ளார். கொலையான நேரத்தில், அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள்:
மேலும், தனியாக வீட்டில் வசித்து வந்த ஆஷா வீட்டிற்கு அடிக்கடி பல ஆண்கள் வந்து சென்றுள்ளனர். கொலையான சமயத்தில், ஆஷாவின் வீட்டில் மதுபாட்டில்கள் இருந்தன. மேலும் ஆணுறை பாக்கெட்டுகளும் வீட்டில் இருந்தன.
பாலியல் வன்முறை:
இதனால், கொலையான ஆஷாவை மர்ம கொலையாளிகள் பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை சம்பவம் ஒசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணை:
விசாரணை செய்த பின்னர் தான் குற்றவாளிகள் யார் என்பதை உறுதியாக கூற முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications