ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை புறக்கணித்தது நியாயமே: சொல்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை தங்கள் கட்சி புறக்கணித்தது நியாயமானதுதான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் நடந்த ஜனநாயக படுகொலைக்கு 2016 சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டும் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

விலகியது ஏன்?
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஜனநாயகத்தின்படியோ, சட்டத்தின்படியோ உண்மையான தேர்தலாக இருக்காது என்கிற காரணத்தால்தான் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதிலிருந்து விலகியது. இன்றைக்கு வருகிற தேர்தல் வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால் எங்கள் நிலை நியாயமானது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆணையம் விளக்குமா
கடநத் 2011-ம் ஆண்டில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 2,20,962. தற்போது, 2015-ல் மொத்த வாக்காளர்கள் 2,70,281. ஏறத்தாழ 50 ஆயிரம் வாக்காளர்கள் திடீரென்று முளைத்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி முளைத்தார்கள் என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும்.

போலி வாக்காளர்கள்
தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பயனில்லாத நிலையில் நீதிமன்றத்தை நாடிய பிறகு, போலி வாக்காளர்களை நீக்க வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதிமுகவின் கைப்பாவை
நீதிமன்ற ஆணையையும், தேர்தல் ஆணையம் மதித்து நிறைவேற்றவில்லை. கிட்டத்தட்ட அதிமுக அரசின் கைப்பாவையாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது.

பாடம் புகட்டுவோம்
ஸ்ரீரங்கத்தில் நடந்த ஜனநாயக படுகொலைக்கு 2016 சட்டமன்றத் தேர்தல் நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டும் என்கிற நம்பிக்கை நமக்கிருக்கிறது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

அரசியல் சாக்கடை
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது சாக்கடையில் கால் வைப்பதைப் போன்றது என்று கருத்து கூறியிருந்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தோதல் முடிவுகள் வந்த பின்னர் தாங்கள் போட்டியிடாமல் விலகியது நியாயம்தான் என்று கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications