பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
நெல்லை அருகே பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

நெல்லை: ஏர்வாடியில் பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவை முன்னிட்டு மேடை கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த விளக்குகள் அதிக வெளிச்சம் கொண்டவை என கூறப்படுகிறது. இதனால் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

மருத்துவமனையில் அனுமதி
விழா முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் கண் எரிச்சல் அதிகமானமானதால், இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உரிய சிகிச்சை
அதிக திறன் கொண்ட ஹாலஜன் விளக்கின் கேஸ் கசிவு காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் சந்திப்பு
மின் விளக்குகளால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கண் பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததார்.

வழக்குப்பதிவு
இந்த விவகாரத்தில், கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications