ஜெ. பிறந்தநாள்: தொண்டர்கள் வாழ்த்த அதிமுக ஐ.டி அணியின் ஸ்பெஷல் ஏற்பாடு
சென்னை: மிஸ்டு கால் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் கருணாநிதி ஆரம்பித்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு புது டெக்னிக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது அதிமுகவின் ஐ.டி. அணி. மகம் நட்சத்திர பிறந்தநாளான நேற்று மட்டும் 6 லட்சம் பேர் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து கூறியுள்ளதாக அதிமுக ஐ.டி அணியினர் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின், 68வது பிறந்த நாள் விழா, பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் பிறந்த மகம் நட்சத்திர தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர் அதிமுகவினர்.

முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர், மொபைல் போன் எண், 77670 20002; டெலிபோன் எண் 044 - 3312 4234 ஆகியவற்றில் வாழ்த்து தெரிவிக்க, தகவல் தொழில்நுட்ப அணி ஏற்பாடு செய்துள்ளது.
இதன் மூலம் நேற்று ஒரே நாளில் 6 லட்சம் பேர் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளதாக அதிமுக ஐ,டி அணியினர் தெரிவித்துள்ளனர். இந்த எண்களை தொடர்பு கொண்டால், 'முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற அழைத்தமைக்கு நன்றி' என, பெண் குரல் ஒலிக்கும். தொடர்ந்து, அழைத்தவர் தன் பெயர் மற்றும் முகவரியை தெரிவிக்கலாம்; அது பதிவு செய்யப்படும். இதன்மூலம், எத்தனை பேர் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
டெலிபோன் எண்ணில் கடைசி மூன்று எண்கள், தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளையும், அதற்கு முந்தைய, 24, முதல்வர் பிறந்த நாளையும், குறிப்பதாக அமைந்து உள்ளது. இந்த மொபைல் போன் மற்றும் டெலிபோன் எண்களை, 5 லட்சம் மொபைல் போன் எண்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம், தகவல் தொழில்நுட்ப அணியினர் பரப்பி உள்ளனர்.
இதுதவிர, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களிலும் பிரபலப்படுத்தி உள்ளனர். முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்கள் எண்ணிக்கையிலும் சாதனை படைக்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications