அபிராமி அழுக்கு... அபிராமி அழுக்கு.. அபிராமி அபிராமி!
சென்னை: தங்களை அழுக்கு என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதால் ப.சிதம்பரம் தரப்பு கடும் ஆத்திரத்துடன் இருக்கிறதாம்.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற விவாதமும், காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசலும் முடிவே இல்லாத நீண்ட பெரும் பயணமாகும்.
என் வாயை நீ நோண்டு.. உன் வாயை நான் நோண்டுகிறேன் என்ற ரீதியில் மாறி மாறி கோஷ்டிகள் சொக்காயைப் பிடிப்பது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமாகவே மாறிப் போயுள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக இளங்கோவன் தரப்புக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது.

வாசன் போன பிறகு
ஜி.கே.வாசன் இருந்தவரைதான் கோஷ்டிப் பூசல் அதிகமாக இருந்தது. இனி குறையும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அதை விட பல மடங்கு வீரியத்துடன் தற்போது நடந்து வருகிறதாம் சண்டை.

தேவையில்லாத பேச்சு
சமீபத்தில் காரைக்குடியில் நடந்த தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்கும் என்று தனக்கு முன்பே தெரியும் என்று பேசியிருந்தார். இது இளங்கோவன் வாயைக் கிளறி விட்டு விட்டது.

கட்டுமானத் தொழிலாளர்கள் மாநாட்டில் குத்து
இந்த நிலையில் மார்ச் 29-ம் தேதி நடந்த அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் மாநாட்டில் பேசிய இளங்கோவன், 'கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர்களே காரணம். ஆனால் அவர்களோ, காங்கிரஸ் கட்சி தோற்கும் என்பது எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று பேசுகிறார்கள்.

அழுக்கு.. எல்லாம் அழுக்கு..!
அந்த அழுக்குகள் கட்சியில் இருப்பதால்தான் காங்கிரஸ் தோற்றது. அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறினாலே காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் கிடைக்கும். வெற்றி பெறுவோம் என்று பேசி இருக்கிறார்.

என்ன பேச்சு இது
இளங்கோவன் இப்படிப் பேசியிருப்பது ப.சிதம்பரம் தரப்பை டென்ஷனாக்கியுள்ளது. ஏற்கனவே அப்பாவும், மகனும் வெளியேறினால் நல்லது என்றார். இப்போது அழுக்கு என்கிறார். இதை விடக் கூடாது என்று கொதிக்கிறார்களாம்.

புகார் போடு
இளங்கோவனின் இந்தப் பேச்சு குறித்து ஒரு புகாரை மேலிடத்திற்குத் தட்டி விட்டுள்ளனர். இந்த முறை இளங்கோவனை சும்மா விடக் கூடாது என்று கோபமாக கூறுகிறார்களாம்.

இது வேற...
இந்த நிலையில் தனது மகனுக்கு கட்சியில் ஒரு பெரிய பதவியை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறாராம் ப.சிதம்பரம். அதாவது மாநில பொருளாளர் பதவியில் கார்த்தியை அமர வைக்க முடியாமல் உள்ளாராம்.

குறுக்கே புகுந்த ஞானம்
ஞானதேசிகன் தலைவராக இருந்தபோதே தனது மகனுக்கு மாநில பொருளாளர் பதவியைப் பெற முயற்சித்தார் ப.சிதம்பரம். அகமது படேல் மூலம் ஆர்டர் போடவும் வைத்தார். ஆனால் ஞானதேசிகன் கார்த்தியை கண்டு கொள்ளவில்லை. கோவைத் தங்கம் கையில் "கல்லா"வைக கொடுத்து விட்டார்.

இப்போதும் முடியலையே
இப்போது இளங்கோவன் தலைவராக இருக்கும் நிலையில் மீண்டும் பொருளாளர் பதவிக்கு முயற்சித்தார் சிதம்பரம். ஆனால் இங்கேயும் முடியவில்லையாம்.
இப்படி அடுத்தடுத்து இளங்கோவன் தனக்கு எதிராக "டேம்" கட்டி வருவதால் "டெர்ரர்" முகத்துடன் வளைய வருகிறாராம் ப.சிதம்பரம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications