தேர்தல்களையே 'ஆட்டைய' போடும் கபளீகர கலையை செய்து வருகிறது பாஜக- ப. சிதம்பரம் கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: தேர்தல்களையே திருடும் கலையை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

Recommended Video

    தேர்தல்களையே ஆட்டைய போடும் கபளீகர கலையை செய்து வருகிறது பாஜக:ப. சிதம்பரம் கடும் தாக்கு - வீடியோ

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து ப சிதம்பரம் பேசியதாவது:

    P. Chidambaram says BJP steals All Elections

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற திசையை நோக்கி அனைவரும் பயணிக்கின்றனர். பத்தாண்டு கால அவலத்தை துடைத்தெறிய வேண்டும். இந்த சரித்திர நிகழ்வை படைக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பேராபத்தை ஏற்படுத்தும் நச்சுச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

    தேர்தலையே திருடும் கட்சி பாரதிய ஜனதா கட்சி . அதை மிக உயர்ந்த கலையாகவே நினைத்து செயல்பட்டு வருகிறது அந்த கட்சி. ஜெயலலிதா ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அப்படி என்கிற ஒருவர் மந்திரிசபையில் இருப்பது எனக்கு தெரியாது. ஓ பன்னீர் செல்வத்தை தெரியும்- செங்கோட்டையனை தெரியும்- ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை தெரியாது.

    சட்டம் மற்றும் நீதி மன்றங்களுக்கும் சமூகத்திற்கும் இங்கே பாதுகாப்பில்லை. தமிழ் மொழியை தமிழ் இனத்தை பாதுகாக்க மக்கள் வெகுண்டெழுந்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ப. சிதம்பரம் பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+