முதல்வர் பதவிக்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கும் உள்ளது - ப.சிதம்பரம்
தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
அதனையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதேபோல், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழுத் தலைவராக சசிகலாவை ஏகமனதாக தேர்வு செய்துள்ளனர். . அதன்படி, தமிழக முதல்வராக விரைவில் பதவியேற்க உள்ளார் சசிகலா.
இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
தங்களது தலைவரை தேர்வு செய்யும் உரிமை அதிமுகவினருக்கு உள்ளது. அதேபோல், தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கும் உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் நாற்காலியை காமராஜர், அண்ணா போன்றவர்கள் அலங்கரித்த காலத்தை பெருமையுடன் நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ள சிதம்பரம், அதற்கு எதிரான பாதையில் அதிமுக மற்றும் தமிழக மக்கள் பணிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications