For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா நடராஜனுக்கு எதிராக பி.எச்.பாண்டியன் தலைமையில் இன்று அதிருப்தி குழு உதயம்?

சசிகலா நடராஜனுக்கு எதிராக அதிமுகவில் அதிருப்தி குழு உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படும் சசிகலா நடராஜனுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பி.எச்.பாண்டியன் தலைமையில் அதிருப்தி குழு உதயமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அவரது உயிர் தோழியாக கருதப்படும் சசிகலா நடராஜன் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுவரை ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த சசிகலா நடராஜன் இதன்மூலம் நேரடி அரசியலில் களம் இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

P.H.pandiyan has opposed to Sasikala to appoint as ADMK General Secretary

இருப்பினும் சசிகலா நடராஜன் தலைமை ஏற்பதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஒருங்கிணைத்து வருகிறார். இருந்தாலும் சசிகலா நடராஜனுக்கு ஆதரவு ஒருபக்கம் பெருகி வருகிறது. கிட்டதட்ட அவர் பொதுச் செயலாளர் பதவியை ஏற்பது உறுதியாகிவிட்டது.

இதனிடையே சசிகலா நடராஜனை முதல்வராக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலில் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும் என்பதற்காக சசிகலா நடராஜனுக்கு எதிராக பி.எச். பாண்டியன் தலைமையில் இன்று அதிருப்தி குழு உதயமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்த போது அதை வரவேற்று ஜெயலலிதா முன்பே அவர்களை விமர்சித்தவர் பி.எச். பாண்டியன். மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களிலும் அவர்களை விமர்சித்து பேசியவர் பி.எச்.பாண்டியன்.

English summary
P.H.Pandian, former Speaker of the Tamil Nadu Assembly, he opposed to Sasikala to appoint as ADMK General Secretary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X