கனவை அடக்கம் செய்து நகர்வோம்... அடுத்த படுகொலைகளை நோக்கி... நீட் குறித்து பா ரஞ்சித்
நீட் தேர்வில் சோபிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பிரதீபா குறித்து பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வில் சோபிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பிரதீபா குறித்தும், வருங்கால தலைமுறை குறித்தும் இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 2016 முதல் கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத மாணவி அரியலூர் அனிதா கடந்த 2016-இல் தற்கொலை செய்து கொண்டார்.

அதுபோல் இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபாவும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்த போதிலும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையாததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார்.
#நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள்.யாரிடம் நம்உரிமையை கேட்க்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்..அடுத்த படுகொலைகள் நோக்கி!
— pa.ranjith (@beemji) June 5, 2018
இதுகுறித்து இயக்குநர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்
நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்.வழக்கம்போல் படிக்க திறன் அற்றவர்கள் சாவதே மேல் என எழுதி தள்ளுவார்கள். யாரிடம் நம்உரிமையை கேட்கிறோம் என்று உணராமலே தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம்.. அடுத்த படுகொலைகள் நோக்கி! என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
