தொழில் நஷ்டம்.. மனைவி, 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று நெல் வியாபாரி தற்கொலை
விழுப்புரம் அருகே நெல் வியாபாரி மனைவி மற்றும் 2 மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நெல் வியாபாரி மனைவி மற்றும் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கைவல்லித்தெருவை சேர்ந்தவர் பாபு. 38 வயதான இவர் நெல் வாங்கி விற்கும் தொழில் செய்த வந்தார்.

இவருக்கு கவிதா என்ற மனைவியும் கீர்த்தி, கீர்த்தனா என்ற மகள்களும் உள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் பாபுவின் வீடு திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த எதிர்வீட்டில் வசிக்கும் அவரது உறவினர், கதவை திறந்து பார்த்தார். அப்போது பாபு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதைக்கண்டு அவர் கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தப் போது, பாபுவின் மனைவி மற்றும் 2 மகள்கள் விஷம் குடித்து இறந்த நிலையில் கட்டிலுக்கு கீழே கிடந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாபு தனது மனைவி மற்றும குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பின்னர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நெல் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்னை காரணமாக அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.
நெல் வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications