பழனி கோயிலுக்குள் வேறு மதத்தினருக்கு அனுமதியில்லை..அறநிலையத்துறை புதிய அறிவிப்பு
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயில் படிகளில் சூடம் ஏற்றக்கூடாது, லுங்கி, கைலி அணிந்து கோயிலுக்குள் வரக்கூடாது எனவும் அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடுதான் பழனி மலை. தரையிலிருந்து சுமார் 960 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையின் உச்சியில் முருகன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிலையை போகர் எனும் சித்தர் உருவாக்கியதாகவும், இக்கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகவும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் என மூன்று விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். மற்ற நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் கோயிலை நிதானமாக சுற்றி பார்க்க முடியும் என ஓரளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எப்படி இருப்பினும் பக்தர்களின் வருகை இருந்துக்கொண்டே இருக்கும்.
இந்நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்னர் மாற்று மதத்தை சேர்ந்த இருவர் கோயிலுக்குள் வின்ச் ரயில் மூலம் நுழைய முயன்றுள்ளனர். இதனை பார்த்த கோயில் நிர்வாகத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனையடுத்து தற்போது கோயில் நிர்வாகம் சாப்பில் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில், "இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற சில அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கோயில் படிகளில் சூடம் ஏற்றக்கூடாது, லுங்கி, கைலி அணிந்து கோயிலுக்குள் வரக்கூடாது, கோயில் வளாகத்தில் டிரம் செட் வாசிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பாக இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இதுபோன்று மாற்று மதத்தினர் கோயிலுக்குள் நுழைய கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுண்டு. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications