தஞ்சாவூரில் டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு- பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!!
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பழனி மாணிக்கம். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர். பாலு. ஆனால் இம்முறை எப்படியும் தஞ்சாவூர் தொகுதியை வாங்கி விடுவது எனில் தொடக்கம் முதல் மும்முரமாக இருந்தார் டி.ஆர் .பாலு. இதில் பழனி மாணிக்கம் மிகவும் அதிருப்தி ஆனார்.
இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. இதில் திமுக தலைமையே பஞ்சாயத்து செய்தும் வைத்தது. இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக டி.ஆர். பாலு பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பழனி மாணிக்கம் ஆதரவாளர்கள் கொந்தளித்துப் போயினர். தஞ்சாவூர் நகரில் பல இடங்களில் டி.ஆர். உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திமுகவினர் இந்த போராட்டம் அக்கட்சி தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications