கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு முன் மீனவர்களை விடுவிக்க வேண்டும்.. மோடிக்கு முதல்வர் கடிதம்
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி க
சென்னை: இலங்கை சிறையில் உள்ள 53 மீனவர்களை, அந்தோணியார் திருவிழாவிற்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 53 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளை விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், பாக் நீரிணையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களும் சிறைபிடிக்கப்படுகின்றனர் என்றும் பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கச்சத் தீவில் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் கச்சத்தீவில் அந்தோணியார் ஆலய திருவிழா நடக்க உள்ளதால், அதற்கும் முன்பாக தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அந்தோணியார் திருவிழாவில் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்க வழிவகை செய்துத் தரப் பட வேண்டும் என்றும் முதல்வர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், கச்சத்தீவை மீட்பதே மீனவர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றும் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications