For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 மாணவிகள் தற்கொலை வழக்கு... சகமாணவிகள் புகாரின்பேரில் 2 ஆசிரியைகள் பணிநீக்கம்

பணப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி காரணம் அல்ல என்று சக மாணவிகள் கூறியுளள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    4 மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி காரணம் அல்ல- வீடியோ

    வேலூர்: அரக்கோணம் பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சகமாணவிகள் புகாரின்பேரில் ஆசிரியைகள் லில்லி, சிவக்குமாரி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே பணப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தனர் மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி. இவர்கள் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். அப்போது பருவத் தேர்வில் மாணவிகள் சரியாக மதிப்பெண் எடுக்காததால் ஆசிரியர்கள் திட்டியது தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

     மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை

    மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை

    இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்வகையில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

     மாணவிகள் தற்கொலை

    மாணவிகள் தற்கொலை

    கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவிகள் 4 பேரும் பாடத்தை கவனிக்காமல், தமிழ் ஆசிரியை உள்பட 3 ஆசிரியைகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியை அவர்கள் 4 பேரும் பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பறையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறியதால் பயந்து கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

     மீனாட்சி சுந்தரேஸ்வரி காரணம் அல்ல

    மீனாட்சி சுந்தரேஸ்வரி காரணம் அல்ல

    இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சகமாணவிகள் மாவட்ட கல்வி அலுவலர் அமுதாவிடம் புகார் அளித்துள்ளனர். அமுதாவிடம் அவர்கள் கூறுகையில், 4 மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியை மீனாட்சி சுந்தரேஸ்வரி காரணம் அல்ல.

     வேறு ஆசிரியைகளே காரணம்

    வேறு ஆசிரியைகளே காரணம்

    ஆசிரியை மீனாட்சி மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியைகள் லில்லி மற்றும் சிவக்குமாரியே காரணம் என மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மாணவிகளிடம் முதன்மை கல்லி அலுவலர் மார்ஸ் விசாரணை நடத்தினார். பள்ளி மாணவிகள் புகாரின்பேரில் பணப்பாக்கம் பள்ளியில் தற்காலிக ஆசிரியைகளாக பணியாற்றி வந்த லில்லி மற்றும் சிவக்குமாரியை பெற்றோர் ஆசிரியர் கழகம் பணி நீக்கம் செய்தது.

    English summary
    There is a new turning point in Arakkonam School girls committed suicide case. Other girls of that school demands to get back the suspend action against Meenakshi Sundereswari.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X