உக்கிரன்கோட்டையி்ல் புதை்து கிடக்கும் “பாண்டியர்கள்” கோட்டை – அகழ்வாராச்சியில் கண்டுபிடிப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாராய்ச்சியில் பாண்டியர் கால பழப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
அங்கு கோட்டை உள்பட பலவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை அருகே அழகியபாண்டியபுரத்தை அடுத்த உக்கிரன்கோட்டை வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும்.

சுற்றிச் சூழ்ந்த கோட்டைகள்:
பாண்டிய மன்னர்கள் கோட்டை கட்டி வாழ்ந்ததற்கான சரித்திர சான்றுகள் அந்த ஊரை சுற்றிலும் காணப்படுகின்றன. மதுரையை ஆண்ட பராந்தக வீரநாராயணன் என்னும் உக்கிர பாண்டியன் நாட்டின் பாதுகாப்பிற்காக பல்வேறு இடங்களில் கோட்டை கொத்தளங்களை அமைத்தான்.
வரலாற்றுச் சான்றுகள்:
நெல்லை அருகே உக்கிரன்கோட்டையும், அம்மன்னரின் ஆட்சி காலத்தை குறிப்பிடும் வகையில் வரலாற்று சான்றுகளை உள்ளடக்கி காணப்படுகிறது.
ஆய்வுக்கு அனுப்ப முடிவு:
இந்த நிலையில் சென்னையில் இருந்து தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தி, ஆற்காடு காப்பாட்சியர் ரஞ்சித், கல்வெட்டு ஆய்வாளர் பாஸ்கர், தொல்லியல் ஆய்வாளர்கள் ஜெயராஜ், சங்கரநாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உக்கிரன்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பொருட்களை ஆய்வு செய்தனர். அங்கு கிடைத்த பொருட்களை சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
பழமையான் பொருட்கள்:
இதுகுறித்து தொல்லியல் துறை துணை கணகாணிப்பாளர் கூறுகையில், "பழமையான உக்கிரன்கோட்டையில் 5 இடங்களில் 10 அடி ஆழமுள்ள குழிகள் தோண்டப்பட்டு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இங்கு கோட்டை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அந்த காலத்தில் ஆயுதங்கள் தயாரிக்க குடிசபல் என்னும் பழங்கால பானையில் உலோக பொருட்களை உருக்கியுள்ளனர்.
வணிகத் தொடர்பும் அதிகம்:
அந்த பானைகள் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. ரோமன் துணிகளும் இங்கு கிடைத்துள்ளதால் வணிக தொடர்பும் தெரிய வருகிறது. இந்த ஊரில் நந்திகள் நிறைய கிடைப்பதால் சிவ வழிபாடு இருந்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்நது சோதனை நடத்துவோம் என்று தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications