விண்ணை அதிரவைத்த அரோகரா சரணகோஷம்..வெகுவிமரிசையாக பழனி பங்குனி உத்திர திருத்தேரோட்டம்!
பழனி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பங்கு உத்திர காலத்தில் பழனி முருகன் கோவிலுக்கு கொடுமுடி உள்ளிட்ட புனிதத் தலங்களில் இருந்து காவடிகளில் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருவது வழக்கம். பழனி முருகன் கோவிலில் உள்ள சிலை நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டது. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகம் என்பதால் முருகக் கடவுளை குளிர்விக்க இத்தகைய தீர்த்த காவடிகளை பக்தர்கள் எடுத்து வருவது வழக்கம்.

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடபெற்றது. இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்றனர்.

பங்குனி உத்திரநாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு சண்முக நதியில் முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானை சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். இதனையடுத்து காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு திருஆவினன்குடியில் தந்தப் பல்லக்கில் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

முற்பகல் 11.30மணிக்கு வடக்கு கிரிவீதியில் முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து பல்வேறு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் மாலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
VIDEO | Devotees throng Palani, Tamil Nadu to attend Panguni Uthiram Chariot festival.
— Press Trust of India (@PTI_News) March 24, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/s02U6MdQFB
திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பழனி நகர பிரமுகர்கள் பங்கேற்றனர். அப்போது பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என எழுப்பிய சரணகோஷம் விண்ணை அதிர வைத்தது. அனைத்து கிரிவீதிகளிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேர் உலா வந்தது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications