நான் ராஜினாமா பண்ணிட்டா நீங்க எம்.எல்.ஏ ஆகி கேள்வி கேப்பீங்களா? பிரஸ் மீட்டில் கொதித்த வேல்முருகன்!
சென்னை: சென்னையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்புடன் இணைந்து நடத்திய பிரஸ்மீட்டில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு காட்டமாக பதில் அளித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தால், நெய்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலம், நீர், காற்று ஆகியவை மிகவும் மாசுபட்டு, பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள், நீண்டகால நோய்கள் ஏற்படுவதாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை வெளியிடும் நிகழ்வில் பண்ருட்டி எம்.எல்.ஏவும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகனும் பங்கேற்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய தவாக தலைவர் வேல்முருகன், "நெய்வேலியைச் சுற்றியிருக்கும் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் மர்மமான முறையில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கு வழியாக ரத்தம் வருகிறது. சருமப் பிரச்னை, இதயப் பிரச்னை, சிறுநீரகக் கோளாறு போன்றவற்றால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்.
இது குறித்து மருத்துவர்களிடம் அந்தப் பகுதி மக்கள் செல்லும்போது, உங்களுக்கு தூய காற்று இல்லை, தூய தண்ணீர் இல்லை. அதனால், உங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளுங்கள்' என வலியுறுத்துகிறார்களே தவிர, இதற்கு நிரந்தர தீர்வு எதுவும் சொல்லப்படுவதில்லை. உலகளாவிய அமைப்பினால் அந்த நிலத்தடி நீர், காற்று ஆகியவை சோதிக்கப்பட்டு தெற்காசியாவிலேயே மக்கள் இனம் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும்கூட இதுவரை அந்தப் பகுதி மக்களுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. இங்கு உள்ள அனைவரும் ஆளும் அரசுடன் ஏதோ ஒரு வகையில் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் கூட மனித உரிமைகள் மீறல், சுற்றுச்சூழல் ஆபத்து, காவல்துறை அராஜகப் போக்கு என எதிலும் நாங்கள் சமரசம் செய்துகொண்டதில்லை.
நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைத்து மாவட்ட மக்களையும் ஒன்றிணைத்து, தொடர் போராட்டங்களை நடத்தத் தயாராக இருக்கிறோம்"" எனத் தெரிவித்தார்.

அப்போது, ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள், இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் வகையில் உங்கள் எல்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யலாமே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வேல்முருகன், "நான் ராஜினாமா செய்துவிட்டால், வேல்முருகனின் குரலாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் பேசுவது? நீங்கள் எம்.எல்.ஏ ஆகி பேசுகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், "நான் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால்தான், இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசி வருகிறேன். தொழில்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் என அனைவரிடமும் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்று, விவசாயிகளின் பக்கம் நிற்கிறேன். நாங்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் நீங்கள் உத்தரவாதம் தந்தால், நான் இப்போதே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனத் தெரிவித்தார் வேல்முருகன்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications