'லேட்'டாக இருந்தாலும் பண்ருட்டியார் நிதானமாக முடிவெடுத்துள்ளார்: மைக்கேல் ராயப்பன்

Subscribe to Oneindia Tamil

Panruti Ramachandiran’s decision is very late but strong: Michael Rayappan
சென்னை: அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் எடுத்துள்ள முடிவு நிதானமானது என்று தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், கட்சியின் அவைத்தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளது தேமுதிகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தே.மு.தி.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் நிதானமாக முடிவு எடுத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

பக்குவமான அரசியல்வாதி என்பதால் காரணம் தெரிவித்துவிட்டு பண்ருட்டி ராமச்சந்திரன் விலகியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தே.மு.தி.க.வில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+