விஜயகாந்த்தை செதுக்கிய 'சிற்பி' பண்ருட்டியாரின் விலகல் ஏன் ஏன் ஏன்...?
சென்னை: விஜயகாந்த்தை அரசியல் பாதைக்குத் திருப்பி அவரை ஆரம்பத்தில் சரியான கோணத்தில் செலுத்தி ஒரு அரசியல் தலைவராக, சக்தியாக மக்கள் மத்தியில் உருவாக்கிக் காட்டிய, பண்ருட்டி ராமச்சந்திரன் திடீரென அரசியலுக்கும், தேமுதிகவுக்கும் முழுக்குப் போட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடல் நிலை சரியில்லை, வயதாகி விட்டதாக தனது விலகலுக்கான காரணமாக பண்ருட்டியார் கூறியிருந்தாலும், அவரது விலகல் முடிவு விவாதப் பொருளாகியுள்ளது. காரணம், சமீப காலமாக அவருக்கும், தேமுதிகவுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பு, ஒதுக்கப்படுவதாக வெளியான தகவல்... உச்சகட்டமாக சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அவருக்கும், கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான தகவல்கள்.
பண்ருட்டியாரின் விலகல் முடிவு யாருக்கு எப்படியோ நிச்சயம், விஜயகாந்த்துக்கு கண்டிப்பாக நஷ்டமானதாகவே இருக்க முடியும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

திமுகவிலிருந்து உதித்தவர்
1937ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பிறந்த பண்ருட்டியார் தெளிவான சிந்தனையோட்டம் கொண்டவர். நிதானமான செயல்பாடுகளில் நம்பிக்கைக் கொண்டவர். எதையும் அழுத்தமாகவும், ஆழமாகவும் செய்யக் கூடியவர்.. ஆரம்பத்தில் இவர் தீவிர திமுககாரர்.

முன்னாள் அமைச்சர்
திமுக மற்றும் அதிமுக அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த தலைவர்
பின்னர் அதிமுகவில் இணைந்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் இதயத்தில் நெருக்கமான இடத்தைப் பிடித்தவர். முக்கியப் பிரச்சினைகளில் பண்ருட்டியாருடன் ஆலோசனை கலக்கும் அளவுக்கு எம்.ஜிஆரிடம் நல்ல நெருக்கத்துடன் இருந்தவர்.

3 கட்சிகள்.. 6 முறை பண்ருட்டி எம்.எல்.ஏ.
பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. அதுவும் 3 கட்சிகள் சார்பாக.

திமுக - அதிமுக - பாமக
இதில் 67, 71 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திமுக சார்பாகவும், 77, 80, 84 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பாகவும், 1991 தேர்தலில் பாமக சார்பாகவும் சட்டசபைக்கு பண்ருட்டியிலிருந்து தேர்வானவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

பாமகவின் முதல் எம்.எல்.ஏ.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பி்ல சட்டசபைக்குள் நுழைந்த முதல் எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரன்தான். டாக்டர் ராமதாஸுடன் இவரால் ஒத்துப் போக முடியாததால் அமைதியாக பாமகவிலிருந்து வெளியேறி விட்டார்.

தேமுதிகவின் தந்தை...
கிட்டத்தட்ட தேமுதிகவின் தந்தை என்று கூறும் அளவுக்கு அக்கட்சியை, அதை ஒரு கட்சியாக செதுக்கி, சீராக நடை போட வைத்தவர் நிச்சயம் பண்ருட்டி ராமச்சந்திரன்தான்.

அ முதல் ஃ வரை.. சொல்லிக் கொடுத்தவர்
திரைப்பட நடிகராகவும், சமூக சேவைகளை செய்பவராகவும் மட்டுமே அறியப்பட்ட விஜயகாந்த்தை ஒரு அரசியல் சக்தியாக மாற்றி மக்கள் முன்பு நிறுத்தியவரும் பண்ருட்டியார்தான்.

கூட்டணியே வேண்டாம்...
கூட்டணியே அமைக்காமல் தொடர்ந்து போட்டியிடுவோம், மக்கள் முன்பு நல்ல பெயர் எடுப்போம் என்று விஜயகாந்த்துக்கு கூறி அதன்படியே தேமுதிகவை மக்களிடம் செல்வாக்கு பெறும் அளவுக்குக் கொண்டு சென்றவரும் நிச்சயம் பண்ருட்டியார்தான் என்று சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

விலக ஆரம்பித்த மனங்கள்...
ஆனால் இப்படி பண்ருட்டியார் சொன்ன அனைத்தையும் கேட்டு தெள்ளத் தெளிவாக நடை போட்டு வந்த விஜயகாந்த், பின்னர் அவருடன் மன மாச்சரியம் கண்டதற்கான காரணம்தான் யாருக்கும் இதுவரை சரியாக புரியவில்லை.

அதிமுகவுடன் கூட்டணி.. முதல் சஞ்சலம்
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை அத்தனை கட்சிகளுமே குறிப்பாக அதிமுகவினர், விஜயகாந்த்தைப் பார்த்து பயந்து கிடந்தனர். இது உண்மை.. ஆனால் அப்படிப்பட்ட விஜயகாந்த்தையே போயஸ் கார்டனுக்கே வரவழைத்து கூட்டணியில் இணைத்து ஜெயலலிதா மேற்கொண்ட அரசியல் சாணக்கியத்தால் தேமுதிகவுக்கு கிடைத்த பலன்- தற்காலிக அரசியல் அங்கீகாரம் மட்டுமே.. மக்கள் மனதில், குறிப்பாக திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று நினைத்த மக்கள் மனதிலிருந்து தேமுதிக விலக்கப்பட்டது.

அடுத்தடுத்து குழப்பம்
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக செய்த கி்ல்லாடித்தனமான வேலைகளால் விஜயகாந்த் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார். அப்போது அதையெல்லாம் தனக்கு வழி காட்டிய பண்ருட்டியார் மீதுதான் அவர் காட்டியதாக கூறப்பட்டது. கடுமையான வாக்குவாத்தில் அவர் சில வார்த்தைகளை விட்டு விட்டதாகவும் கூட அப்போது செய்திகள் பரபரப்பாக வந்தன.

முக்கிய முடிவுகளில் ஓரம் கட்டப்பட்ட பண்ருட்டியார்
முதல் கூட்டணியில் ஏற்பட்ட சங்கடத்திற்குப் பின்னர் பண்ருட்டியாரை கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்க ஆரம்பித்து விட்டார் விஜயகாந்த் என்கிறார்கள். பண்ருட்டியாரும் அதை அமைதியாக சகித்துக் கொண்டு ஓரமாக இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்.

விலகலால் தேமுதிகவுக்கு என்ன பாதிப்பு வரும்...
தற்போது பண்ருட்டியார் அரசியலை விட்டும், தேமுதிகவை விட்டும், எம்.எல்.ஏ பதவியை விட்டும் விலகி விட்டார். இதனால் தேமுதிகவுக்கு என்ன பாதி்ப்பு வரும் என்பதை இப்போது நிஜமாகவே கணிக்க முடியாதுதான்... இருப்பினும் விஜயகாந்த் நிச்சயம் நல்லதொரு வழிகாட்டியை இழந்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications