அதிமுகவில் இணைய அழைத்தால் பார்க்கலாம்.. அதிமுக வெற்றிக்கு பங்காற்றுவேன்: பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: அதிமுகவில் இணையுமாறு முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் பார்க்கலாம் என்றும் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பங்காற்றுவேன் என்றும் தேமுதிக முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர முக்கிய காரணியாக இருந்தவர் அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது.
விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த மாதம் 10-ம் தேதி தேமுதிகவில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு சார்பில் அண்ணா விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
விருது கிடைத்தது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

புரட்சித் தலைவிக்கு நன்றி
இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. அண்ணா காலத்தில் அவருடன் பேசி, பழகியவர்களில் ஒரு சிலர்தான் இன்று இருக்கின்றனர். அவர்களில் எனக்கு அண்ணா விருதினை தமிழக அரசு சார்பில் முதல்வர் புரட்சித் தலைவி வழங்கியுள்ளது எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும். அதற்காக புரட்சித் தலைவிக்கு நன்றி. அண்ணா வழியில் இந்த ஆட்சி நடக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அண்ணாவின் அழைப்பு
நான் 1956-ல் உதவி மின்பொறியாளராக இருந்தபோது, அண்ணாதான் அந்தப் பணியை ராஜினாமா செய்யச் சொல்லி என்னை அரசியலுக்கு அழைத்து வந்தார். ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

புரட்சித்தலைவியின் நல்லாட்சி
தற்கால அரசியலை, ‘சாமானிய மக்களின் சகாப்தம்' என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப, இன்றைக்கு புரட்சித்தலைவி தலைமையில் சாமானியர்களின் ஆட்சி நடக்கிறது. அதன் அடையாளம்தான் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது.

பொங்கல் பரிசு
புரட்சித் தலைவி எனக்கு அளித்த விலை மதிக்க முடியாத பொங்கல் பரிசாக இதை கருதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக கருதுகிறேன்.

அதிமுகவின் வெற்றிக்கு
என்னால் உடல்ரீதியாக ஓடியாடி உழைக்க முடியாது. என்றாலும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது பங்கை ஆற்றுவேன். அதிமுகவில் சேருவது பற்றி முடிவெடுக்க வில்லை. முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் பார்க்கலாம்.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications