அந்தோ மறைந்தாரே மேதகு அப்துல்கலாம்.. பண்ருட்டி வேல்முருகன் வேதனை
சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தைத் தருகிறது.

நம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த வறுமை விரட்டிய போதும் அதைக் கண்டு துவண்டு போகாமல் பள்ளி பருவத்தில் வீடு வீடாக பேப்பர்கள் போட்டு குடும்ப சுமையை ஏற்றவர். அவர் படித்தது முழுவதும் தமிழ்வழிக் கல்விதான்..
பிறப்பால் இஸ்லாமியராக இறந்தாலும் அனைத்து மத உறவுகளையும் நேசித்தவர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதனைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டி.யில் என கல்வி கற்ற பின்னர் நாட்டின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்கு தம்மை ஒப்படைத்துக் கொண்டார்
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய பொக்ரான்- 2 அணு ஆயுத சோதனையில் மிக முக்கியமாக பங்காற்றியவர்.. இந்த நாட்டின் உயரிய விருதுகளாள் சிறப்பிக்கப்பட்டவர்..
இந்த தேசத்தின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவி வகித்த காலத்திலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.. இந்த நாட்டின் 64 கோடி இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக விடிவெள்ளியாக திகழ்ந்தவர்.. அவரது 'கனவு காணுங்கள்" எனும் தாரக மந்திரம்தான் இளைஞர்களின் தாரக முழக்கமாக தேசிய கீதமாக இருக்கிறது...
தமிழ் மொழியை திருக்குறளை மிகவும் நேசித்தவர்.. தமது உரைகளில் நூல்களில் திருக்குறள்களை எப்போதும் மேற்கொள்காட்டியவர்... தமது குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தில் தூக்கு தண்டனை தொடர்பான கருணை மனுக்களை நிராகரிக்காமல் அவற்றின் மீது முடிவெடுக்காமல் வைத்திருந்த கருணையாளர்.. பதவியில் இல்லாத காலத்தில் தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்துகளை முன்னெடுத்த மரண தண்டனையை ஒழித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மனித நேயப் பற்றாளர்....
நாட்டின் நதிகளை இணைக்க விரும்பியவர்.... 2020ஆம் ஆண்டு இந்தியாவை வல்லரசாக்குவோம் என்ற நம்பிக்கையோடு இயங்கியவர்.. அவர் நேசித்த மாணவர்கள் மத்தியிலேயே இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்து இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஆழப்பதிந்து இன்று நம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்திருக்கிறார் மாபெரும் அறிவியல் மேதை அப்துல்கலாம்..
அறிவியல் மாமேதை மேதகு அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலையும் அன்னாருக்கு எங்களது செம்மார்ந்த இறுதி வணக்கத்தையும் செலுத்துகிறோம்.. மேதகு அப்துல்கலாம் அவர்களது லட்சியங்களை நமது இளைய சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதுதான் அவருக்கு நாம் செலுத்துகிற உண்மையான இரங்கலாக இருக்கும் என்பதை நினைவில் கொண்டு அவரது வழியில் நம் பயணத்தைத் தொடர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications