சதிகளைத் தகர்த்து, சரித்திரம் படைத்து, நல்லாட்சி தொடர்ந்திட... ஜெ.வுக்கு வேல்முருகன் வாழ்த்து
சென்னை: தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்று, தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்திட, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சதிகளை தகர்த்து சரித்திரம் படைத்து நல்லாட்சியை தொடர்ந்து வழங்கிட மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்கள் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சீரோடும் சிறப்போடும் செயல்படுத்தி வந்துள்ளது.
உலகத் தமிழினமே கையறு நிலையில் நின்ற போது, இதோ உங்களுக்காக இந்த தமிழக அரசு இருக்கிறது என்று தாயுள்ளத்தோடு ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு உற்ற துணையாக ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்து பேராறுதலையும் பெருநம்பிக்கையும் அளித்ததை தமிழினம் என்றென்றும் நன்றியோடு நினைவில் கொள்ளும்..
அதேபோல் 23 ஆண்டுகாலம் தூக்கு கொட்டடியில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மற்றும் ஆயுள்சிறைவாசிகளாக இருந்த நளினி உள்ளிட்ட நால்வர் என 7 தமிழர்களையும் விடுதலை செய்வதாக மற்றுமொரு மாந்தநேயமிக்க ஒட்டுமொத்த தமிழினமே உச்சிமோந்து வரவேற்று கொண்டாடிய சரித்திரம் மிக்க தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்..
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழகத்து ஆற்று நீர் உரிமை பிரச்சனைகள் உள்ளிட்ட வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் உறுதியான அனைத்துவகையான போராட்டங்களையும் முன்னெடுத்தது மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.
இடையிலே சிறிது காலம் எதிரிகளின் சதிகளால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லாட்சிக்கு இடையூறு ஏற்பட்ட போதும் அந்த தடைகளையெல்லாம் தகர்ந்து எறிந்துவிட்டு மீண்டும் தமிழகத்தின் முதல்வராக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரியாசனத்திலே அமர இருக்கிறார்கள்.. தமிழகத்தின் நிரந்தர முதல்வராக தமிழக மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்கிட மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத் தமிழ் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தற்போது நான் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு கலந்து கொண்டு வருகிறேன்.. இங்குள்ள உலகத் தமிழர் இயக்கங்கள், தமிழின உறவுகள் அனைத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து பேருவகையும் பெருமகிழ்வும் அடைந்து வருவதையும் தங்களது மேலான பார்வைக்கும் கொண்டு வருகிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் அவரது தலைமையிலான தமிழின நலன் காக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்தும் உறுதுணையாக அரணாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு மீண்டும் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு உலகத் தமிழினத்தின் சார்பாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications