ஆர்.கே நகர் தேர்தல் பாதுகாப்பு... துணைராணுவம் களம் இறக்கப்பட்டது
ஆர்.கே நகர் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவம் களமிறக்கப்ட்டு இருக்கிறது.
சென்னை: ஆர்.கே நகர் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவம் களமிறக்கப்ட்டு இருக்கிறது. இதற்காக இரண்டு துணை ராணுவ கம்பெனிகள் படைகள் இன்று அதிகாலை ஆர்.கே நகர் தொகுதிக்கு வந்தடைந்தது.
சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது அங்கு மிகவும் தீவிரமான தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆர்.கே நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பறக்கும் படையை சேர்ந்த சிறப்பு அதிகாரிகளும், தமிழக போலீசும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவப்படையினர் இன்று அதிகாலை ஆர்.கே நகர் தொகுதிக்கு வந்தடைந்தனர். மொத்தம் 276 வீரர்கள் தற்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் சில நாட்களில் 10 சிறப்பு கம்பெனி துணை ராணுவப்படையினர் ஆர்.கே நகர் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications