பிரகாஷ் ஜவடேக்கருடன் முதல் ஆளாக பாரி வேந்தர் சந்திப்பு... கூட்டணி குறித்து பேச்சு!
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து சென்னையில், ஜவடேக்கரை, இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், மீடியா மற்றும் கல்வி நிறுவன அதிபருமான பாரிவேந்தர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மீனம்பாக்கம் பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த ஜவடேக்கரை, இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், மீடியா மற்றும் கல்வி நிறுவன அதிபருமான பாரிவேந்தர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு இந்திய ஜனநாயக கட்சியும் இடம்பிடித்திருந்தது. இருப்பினும், போட்டியிட்ட பெரம்பலூர் மக்களவை தொகுதியில் கட்சி தலைவர் பாரிவேந்தர் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் சட்டசபை தேர்தலிலும், பாஜக கூட்டணியில் தொடருவதா அல்லது தனியாக போட்டியிடுவதா என்பது குறித்து பாரிவேந்தர் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது. தாங்கள் விரும்பும் தொகுதிகளை பாஜக கொடுத்தால் அதனோடு கூட்டணி வைக்க பாரிவேந்தர் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்துதான், இன்று ஜவடேக்கரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் பாரிவேந்தர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications