பெரம்பலூரில் பாரிவேந்தர் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெரம்பலூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவரான பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த அறிவி்ப்பை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

இதையடுத்து நேற்று மாலையில் இந்திய ஜனநாயகக் கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. கட்சியின் நிறுவனரான பாரிவேந்தரே போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சமுத்து என்ற பாரிவேந்தர், எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் தலைவர் ஆவார். புதிய தலைமுறை, புதுயுகம் உள்ளிட்ட டிவி சானல்களையும் நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications